சிங்கப்பூர் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் செயற்குழுத் தேர்தல் செல்லாது: உயர் நீதிமன்றம்

1 mins read
edbe5919-bfa8-4cc3-ac17-8fc3539d2148
தீர்ப்பை எதிர்த்து திரு நியோ தியாம் டிங் மேல்முறையீடு செய்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வாகன வர்த்தகர்கள் சங்கத்துக்கும் அதன் தலைவர் திரு நியோ தியாம் டிங்கிற்கும் இடையே சட்டரீதியான மோதல் ஏற்பட்டது.

திரு நியோவுக்கு எதிராகச் சங்கம் வழக்கு தொடுத்தது.

சங்கத்தின் 27வது செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தைச் சங்கம் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் குமாரசுவாமி மே 23ஆம் தேதியன்று தீர்ப்பளித்தார்.

சங்கத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பு அமைந்தது.

தீர்ப்பை எதிர்த்து திரு நியோ மேல்முறையீடு செய்துள்ளார்.

சங்கத்தின் தலைவராக திரு நியோ 2022ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார்.

2024ஆம் ஆண்டில் அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை அவர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.

சிங்கப்பூர் வாகன வர்த்தகர்கள் சங்கம் 1972ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

ஏறத்தாழ 400 பழைய வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்