தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரரை மணமுடிப்பதால் கிடைக்கும் சலுகைக்காக திருமணம்: சிங்கப்பூரருக்குச் சிறை, அபராதம்

1 mins read
a0265535-ef67-4b20-80a8-986cfc35f246
குற்றம் புரிந்த சிங்கப்பூரருக்கு சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

தனக்குச் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக வியட்னாமைச் சேர்ந்த 35 வயது மாது புய் தி ஹுவாங்கை மணந்த சிங்கப்பூரருக்கு ஒன்பது மாதங்கள் 10 வாரச் சிறைத் தண்டனையும் $12,000 அபராதமும் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தங்கிப் பணி செய்வதற்காக வெளிநாட்டவரான புய், சிங்கப்பூரரான 22 வயது நோயல் தியோ ஜுன்வேய்யைத் திருமணம் செய்ததாகக் கூறப்பட்டது. இதற்காக, புய் தி ஹுவாங்கிடம் இருந்து நோயல் $8,000 பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நோயல் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற மூன்று குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்