தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் 10 கிலோ போதைப் பொருள் கடத்தல்: மரண தண்டனையை எதிர்நோக்கும் சிங்கப்பூரர்

1 mins read
40d3c546-aac4-446f-b9d2-94251ff43ab3
ஜோகூர் பாருவில் உள்ள டங்கா பே வீட்டில் குற்றச்செயல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர்பாரு: ஜோகூரில் கடந்த ஏப்ரலில் 10 கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது ஜோகூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று (மே 6) நீதிபதி முஹமட் காலித் அப் கரீம் குற்றச்சாட்டை வாசித்தபோது டான் பான் சூன்,47 என்ற அந்த சிங்கப்பூரர் ‘ஆம்’ என்று தலையை அசைத்தார்.

வேலையில் இல்லாத டான் மீது எம்டிஎம்ஏ எனும் போதைப் பொருளைக் கடத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்கு 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டப்பிரிவு 39பி(1)(ஏ)ன் கீழ் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ குறைந்தது 15 பிரம்படி தண்டனைகளுடன் விதிக்கப்படலாம்.

இதே வழக்கில் ஒன்பது கிராம் ஹெராயின், 44 கிராம் கஞ்சா, தூளாக்கப்பட்ட ‘எம்டிஎம்ஏ’ உள்ளிட்ட போதைப் பொருள்களை வைத்திருந்த மேலும் நான்கு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

அனைத்து குற்றச்செயல்களும் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு10.00 மணிக்கு டங்கா பேயில் உள்ள வீட்டில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்