தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தில் மோட்டார் சைக்கிள் விபத்து; சிங்கப்பூரர் மரணம்

1 mins read
671ae5ba-1dc9-41b6-a965-1e847aaec297
படம்: ஃபேஸ்புக் -

தாய்லாந்தின் தென்பகுதியில் 43வயது சிங்கப்பூரர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மாண்டார்.

முகமது ரீசா அப்துல் ர‌ஷித் என்ற அந்த ஆடவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூரில் இருந்து தமது மோட்டார் சைக்கிள் மூலம் தாய்லாந்து புறப்பட்டார்.

பத்தாலூங் மாவட்டம் அருகே டுக்காட்டி மல்டிஸ்டராடா வி4எஸ் மோட்டார் சைக்கிளில் சென்ற முகமது ரீசா விபத்தில் சிக்கினார்.

முகமது ரீசா வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் மாண்டார், அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தகவல் தரும் விதமாக திங்கள்கிழமை காலை ஃபேஸ்புக் பக்கம் மூலம் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

ஃபேஸ்புக் பதிவில் முகமது ரீசாவின் மோட்டார் சைக்கிள் சேதமடைந்து கீழே விழுந்து கிடந்தது. அவருக்கு மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்து வந்த படங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

முகமது ரீசா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் பலத்த காயங்கள் காரணமாக மாண்டார்.

திங்கள் கிழமை காலை 6:30 மணி வாக்கில் முகமது ரீசா தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்ததாகவும், இன்னும் 800 கிலோ மீட்டர் தூரம் எஞ்சியுள்ளது என்றும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் 7:45 மணிக்கு ஒரு பதிவை பகிர்ந்தார்.

நீண்ட தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட முகமது ரீசாவின் மறைவு வருத்தமளிப்பதாக அவரது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் சமூக ஊடகங்கள் வழி இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்