சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று, ஜோகூரிலுள்ள உள்ள ஷெல் நிலையத்தில் பெட்ரோல் ‘பம்ப்’பைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் குழாய் வாகனத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் தனது காரை திடீரென ஓட்டிச் சென்றதால், பெட்ரோல் ‘பம்ப்’பை பலவந்தமாக ஒரு பக்கமாக இழுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்கூடாய் நெடுஞ்சாலையில் ஜோகூர் பாருவில் உள்ள அந்தப் பெட்ரோல் நிலையத்தில் இந்தச் சம்பவம், சனிக்கிழமை (அக்டோபர் 18) இரவு 10.15 மணியளவில் நடந்தது.
சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களை வாடிக்கையாளர் ஒருவர் படம்பிடித்தார்.
சம்பவத்தைப் பார்த்தவரின் கூற்றுபடி, காரை அங்கிருந்து புறப்படவிடாமல் நிலைய ஊழியர் தடுத்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறினார்.
அருகில் இருந்த ஒரு வாகனம், பம்ப் சேதமடைந்த பிறகு பின்னோக்கிச் சென்றதும் காணொளியில் பதிவானது. சேதமடைந்த பெட்ரோல் பம்ப்பை நோக்கி இரண்டு ஊழியர்கள் ஓடுவதும், ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியேறுவதும் காணப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையம் சேவையை நிறுத்த வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.