அமெரிக்காவில் இசை நாடகப் பாடலைப் படைத்த இரு சிங்கப்பூரர்கள்

1 mins read
cb2ab726-11a2-4190-8fa3-1ee4d72bc4f9
பியானோ கலைஞர் டாக்டர் யோன் கியூங் கிம்முடன் டாக்டர் ஜனனி ஸ்ரீதர் அமெரிக்காவில் ‘சிங்பைட்ஸ்’ எனும் பாடலைப் பாடினார். - படம்: டாக்டர் யோன் கியூங் கிம்/யூடியூப்

சிங்கப்பூரின் அதிகாரபூர்வமற்ற தேசிய உணவாகக் கருதப்படும் கோழிச்சோறு பற்றிய பாடல் ஒன்றை அமெரிக்க இசை நிகழ்ச்சி ஒன்றில் இரு சிங்கப்பூரர்கள் படைத்துள்ளனர்.

‘சிக்கன் ரைஸ்’ என்ற தலைப்பிலான அப்பாடலின் வரிகளை எழுதி, அதைப் பாடியவர் ‘சொப்ரானோ’ (soprano) பாடகி ஜனனி ­ஸ்ரீதர். பாடலுக்கு இசை அமைத்தவர் பியானோ கலைஞர் நிக்கலஸ் ஹோ.

அந்தப் பாடல், சிங்கப்பூருக்கே உரிய அம்சங்களைப் பற்றிய ‘சிங்பைட்ஸ்’ என்ற நான்கு பகுதிகளைக் கொண்ட பாடலின் ஒரு பகுதியாகும்.

காணொளி அழைப்பு மூலம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவ்விருவரும், அமெரிக்காவில் படிக்கும்போதோ பணிபுரியும்போதோ தாங்கள் கோழிச்சோற்றுக்கு அதிகம் ஏங்கியதாகக் குறிப்பிட்டனர்.

டாக்டர் ஸ்ரீதர் இசை நாடகப் பாணியில் பாடிய அந்தப் பாடலின் ஒரு பகுதி சென்ற வெள்ளிக்கிழமை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்தக் காணொளி 120,000 முறை பார்க்கப்பட்டது.

நான்கு பகுதிகள் கொண்ட அப்பாடலைத் தயாரிக்க ஏறக்குறைய நான்கு மாதங்களானதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘தி உவு பேர்ட்’, ‘தி பஸ் ஸ்டாப்’, ‘சிங்கப்பூர் ரிவர்’ ஆகியவை பாடலில் இடம்பெற்றுள்ள மற்ற மூன்று பகுதிகளாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்