துருக்கியில் உள்ள சிங்கப்பூரர் ஒரே வாரத்தில் $70,000 நிதி திரட்டினார்

துருக்கியில் உள்ள சிங்கப்பூரர் ஒரே வாரத்தில் $70,000 நிதி திரட்டினார்

1 mins read
f128e9bb-1f3c-4dd7-ae38-8d25f8a8f004
படம்: TURKIYE RELIEF INITIATIVE -

துருக்கியில் உள்ள 36 வயது சிங்கப்பூர் பெண் ஒரே வாரத்தில் 70,000 வெள்ளி நிதிதிரட்டி உதவியுள்ளார்.

இஸ்தான்புல்லில் உள்ள ஜசிண்டா புவா இது தம்மால் முடிந்த ஓர் சிறு உதவி என்றும் நிதி கொடுத்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க தாமும் தன் இரு நண்பர்களும் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்ததாக புவா கூறினார்.

70,000 வெள்ளி நிதியை வைத்து நான்கு பேர் தங்கக்கூடிய 550 கூடாரங்கள் வாங்க முடியும் என்று புவா கூறினார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்குச் சென்று மக்களுக்கு உதவ தமக்கு ஆசை உள்ளது ஆனால் தண்ணீர், உணவு போன்றவை அங்கு குறைவாக இருப்பதால் தன்னால் அங்கு நெருக்கடி ஏதும் வந்துவிடக்கூடாது என்றார் புவா.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 47,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.