சிங்கப்பூரின் மூன்று மின்னிலக்க வங்கிகள் தங்களுடைய நட்டங்களைக் குறைத்துள்ளன.
சில்லறை வர்த்தகத்தில் உள்ளவர்களை ஈர்க்கும் டிரஸ்ட் பேங்க் (Trust Bank), ஜிஎக்ஸ்எஸ் பேங்க் (GXS Bank), மரி பேங்க் (MariBank) ஆகியவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.
தற்போது அவை மெல்ல மெல்ல தங்களது நட்டத்தைக் குறைத்து லாபத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளன.
2024ஆம் ஆண்டின் முடிவில் இந்த மூன்று மின்னிலக்க வங்கிகளும் குறைவான நட்டத்தை எதிர்நோக்கியதாகக் கூறின.
சிங்கப்பூர் சந்தை சிறியது. மேலும் இங்குப் பெரும்பாலானோர் வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர். இதனால் லாபம் ஈட்டுவது சற்று சவாலான ஒன்று என்று நிதி கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
டிரஸ்ட் பேங்க் வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஜிஎக்ஸ்எஸ் கடந்த ஆண்டு 145.4 மில்லியன் வெள்ளி நட்டத்தைச் சந்தித்தது. அதற்கு முந்தைய ஆண்டு நட்டம் 52.1 மில்லியன் வெள்ளியாக பதிவானது.
மரிபேங்க் கடந்த ஆண்டு 51.3 மில்லியன் வெள்ளி நட்டத்தைச் சந்தித்தது. அதற்கு முந்தைய ஆண்டு அது 52.2 மில்லியன் வெள்ளியாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
டிரஸ்ட் பேங்க் கடந்த ஆண்டு 93.4 மில்லியன் வெள்ளி நட்டத்தைச் சந்தித்தது. அதற்கு முந்தைய ஆண்டு அதன் நட்டம் 128.4 மில்லியன் வெள்ளியாக இருந்தது.

