சிங்கப்பூரின் ஏற்றுமதி ஏப்ரலில் 24.5% வளர்ச்சி

சிங்கப்பூரின் ஏற்றுமதி ஏப்ரலில் 24.5% வளர்ச்சி

1 mins read
8338e362-c34b-432b-9e86-a65598fd6da4
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி தொடர்ந்து எட்டாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஏற்றுமதி, ஈரான் போருக்கு இடையிலும் ஏப்ரல் மாதம் தொடர்ந்து ஏற்றம் கண்டிருக்கிறது.

ஏற்றுமதி, தொடர்ந்து எட்டாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் (ஏப்ரல்) 24.5 விழுக்காடு கூடியது. மார்ச்சில், ஏற்றுமதியின் வளர்ச்சி 15.3 விழுக்காடு.

புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த வல்லுநர்கள் முன்னுரைத்த 11.6 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.

மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் 66.7 விழுக்காடு கூடியது. மார்ச்சில் அது 73.9 விழுக்காடாக இருந்தது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த தேவைகள் கூடியதே அதற்கு முக்கியக் காரணம்.

மின்னணுப் பொருள்கள் தவிர்த்த மற்றவற்றின் ஏற்றுமதி கடந்த மாதம் 10.9 விழுக்காடு விரிவடைந்தது. மார்ச்சில் அது 0.6 விழுக்காடு சுருங்கியிருந்தது. ஏப்ரல் மாத வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மருந்தாக்கத் துறை. அதன் வளர்ச்சி மதிப்பு $0.8 பில்லியன்.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் 59.6 விழுக்காடு அதிகரித்தது. மருந்தாக்கப் பொருள்கள், வட்டு ஊடகக் கருவிகள், அளவீட்டுச் சாதனங்கள் முதலியவற்றுக்கான தேவை கூடியதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்