தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்:

சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கம்; தெக்வாண்டோ ஜோடி வெற்றி

1 mins read
bf7adf3f-13ab-4103-9453-63bc1de45c94
சிங்கப்பூரின் தெக்வாண்டோ ஜோடியான நிக்கோலஸ் காவ், டியானா அக்கிடா முகமது டியான் குதாய்ரி தங்கப் பதக்கத்தை வென்றது. - படம்: ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி

பேங்காக்: தாய்லாந்தில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

புதன்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்ற தெக்வாண்டோ போட்டியில் சிங்கப்பூரின் கலப்பு இரட்டையர் அணி வெற்றி பெற்றது.

டியானா அக்கிடா முகமது டியான் குதாய்ரியும் நிக்கோலஸ் காவும் வெற்றி பெற்று சிங்கப்பூருக்குப் பெருமைத் தேடி தந்தனர்.

இந்த ஜோடி, அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட வியட்னாமிய கலப்பு அணியைத் தோற்கடித்தது.

முன்னதாக லாவோஸ் மற்றும் பிலிப்பீன்சின் சவால்களை முறியடித்த சிங்கப்பூர் அணி, இறுதி தெக்வாண்டோ போட்டியில் பங்கேற்றது.

இது, சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள 5வது பதக்கமாகும். ஆனால், தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை.

முன்னதாக நடைபெற்ற ஏதேச்சை பாணி நீச்சல் போட்டியில் நிகோல் அலிதியா காவ், இரண்டவது இடத்தைப் பிடித்து சிங்கப்பூருக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். அவரது சக விளையாட்டாளரான டேரன் யாப், ஆண்களுக்கானப் போட்டியில் 7.660 புள்ளிகளை எடுத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பூப்பந்துப் போட்டியில் ஆண்கள், பெண்களுக்கான பிரிவில் முறையே இந்தோனீசியா, தாய்லாந்து அணியிடம் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கமே சிங்கப்பூருக்குக் கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்