தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் பதக்க வீரர் காலமானார்

1 mins read
d9ca2838-8dc2-4205-adcb-2aaeb86cc038
டான் ஹோவ் லியாங், 91. - கோப்புப் படங்கள்: ஸ்போர்ட் சிங்கப்பூர், குவா சீ சியோங்

சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் பதக்க வீரர் டான் ஹாவ் லியாங் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் திரு டான்.

அவரது சாதனைகளை சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் கிரேஸ் ஃபூ நினைவுகூர்ந்தார்.

“ஹாவ் லியாங்கின் சாதனைகள் பல தலைமுறை சிங்கப்பூரர்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது என்றார் அவர்.

“அவர் வாழ்ந்த காலத்தில் திடல்தட வீரர்கள் சொற்பமாக இருந்தனர். இருப்பினும் ஒரு திடல்தட வீரர் என்ற முறையில் கடினமானப் பயிற்சிகளை ஹாவ் லியாங் மேற்கொண்டார்.

“ஒருவர் எந்த அளவுக்குச் சாதிக்க முடியும் என்பதை அவர் ரோமில் நிரூபித்தார்,” என்று திருவாட்டி ஃபூ தமது செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்