விடைபெறுகிறது சிங்கப்பூரின் பிரபல ‘வீடியோ கேசட்’ கடை

விடைபெறுகிறது சிங்கப்பூரின் பிரபல ‘வீடியோ கேசட்’ கடை

1 mins read
dede1958-9db2-4bb0-bd2c-eef2db5d37d9
ரிடா வீடியோ சென்டர் 1985ஆம் ஆண்டு திருவாட்டி லாரல் கூ மற்றும் அவரது கணவர் உய் கை பெங்கால் திறக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் காணொளி வட்டுகளை வாடகைக்கு விடும் ரிடா வீடியோ சென்டர் (Rida Video Centre) அதன் செயல்பாட்டை நிறுத்தவுள்ளது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக காணொளி வட்டுகளை வாடகைக்கு விடும் தொழிலில் உள்ள ரிடா வீடியோ சென்டர் வரும் ஏப்ரல் மாத இறுதியுடன் அதன் கடையை மூடுகிறது.

புக்கிட் தீமாவில் உள்ள கோரோநே‌‌ஷன் ‌‌‌ஷாப்பிங் பிளாசா கடைத்தொகுதியில் உள்ள ரிடா வீடியோ சென்டர், தனது கடையை மூடுவது குறித்து பிப்ரவரி 21ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

“இத்தனை ஆண்டுகளாக விசுவாசமாகவும் ஆதரவாகவும் இருந்த வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரிடா வீடியோ சென்டர் 1985ஆம் ஆண்டு திருவாட்டி லாரல் கூ மற்றும் அவரது கணவர் உய் கை பெங்கால் திறக்கப்பட்டது. அது முதன்முதலில் செரீன் சென்டரில் செயல்பட்டது. 2015ஆம் ஆண்டு அது இடமாறியது.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட இணையத் தளங்கள் படங்கள், நாடகத் தொடர்களை வழங்குவதால் பலரும் காணொளி வட்டுகளை நாடுவதில்லை.

வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு எடுத்தவர்கள் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வைப்புத் தொகையைத் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் அல்லது மீதி பணத்திற்கு ஏற்ற வீடியோ கேசட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என்று கடை தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் வழி இந்த எண்களில் 9186-6273 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ரிடா வீடியோ சென்டரில் 10,000க்கும் அதிகமான வீடியோ கேசட்டுகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்