தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
குடியிருப்பாளர்கள் இல்லாத மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு

மக்கள்தொகை 6.04 மில்லியனாக வரலாற்று உச்சத்தைத் தொட்டது

3 mins read
b076c469-8ae7-446e-aa88-dfb08fd7357b
முதன்முறையாக, சிங்கப்பூர் மொத்த மக்கள்தொகை ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதன்முறையாக, சிங்கப்பூர் மொத்த மக்கள்தொகை ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, நாட்டின் மக்கள்தொகை 6.04 மில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டைவிட இது 2 விழுக்காடு அதிகம்.

இதில் 4.18 மில்லியன் குடியிருப்பாளர்கள், ஏறக்குறைய 1.86 மில்லியன் நாட்டில் தங்கி இருக்காதவர்கள். இப்பிரிவில் வெளிநாட்டு ஊழியர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் , சார்ந்திருப்போர், அனைத்துலக மாணவர்கள் அடங்குவர்.

பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு மற்றும் அதன் பங்காளி அமைப்புகளின் வருடாந்தர மக்கள் தொகை குறித்த அறிக்கையில் இந்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை (செப். 24) வெளியிடப்பட்டன.

வெளிநாட்டினர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ஏறக்குறைய 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு அனைத்து வேலை அனுமதி அட்டைப் பிரிவிலும் காணப்பட்டது. இதில், வொர்க் பர்மிட் வைத்திருப்போர் 44 விழுக்காடு, வீட்டுப் பணிப்பெண்கள் 15 விழுக்காடும் உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019 - 2024) வருடாந்தர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முந்தைய ஐந்தாண்டு காலத்தில் (2014 - 2019 வரை) இருந்ததை விட சற்று அதிகம்.

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக தாமதமான திட்டங்களை முடிக்க நிறுவனங்கள் கட்டுமானத்துறை, கப்பல் பட்டறை பிரிவு சார்ந்த துறைகளில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்தியதால் வொர்க் பர்மிட் ஊழியர் எண்ணிக்கை அதிகரித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அதிக சம்பளம் தரும் பணிகளைத் தொடர்ந்து நிரப்புகின்றனர். நிதி, காப்புறுதிச் சேவைகள், தகவல் தொடர்பு, நிபுணத்துவ சேவைகள் போன்ற துறைகளில் குடியிருப்பாளர் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றும் தேசிய மக்கள் தொகை, திறனாளர் பிரிவு கூறியது.

சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகை 2030க்குள் 6.9 மில்லியனுக்கும் பெருமளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அது மீண்டும் வலியுறுத்தியது. கடந்த 2013ல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை குறித்த வெள்ளை அறிக்கையின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

நாட்டின் மொத்த மக்கள்தொகை 2030ல் 6.5 மில்லியன் முதல் 6.9 மில்லியன் வரை இருக்கலாம் என்று வெள்ளை அறிக்கை சுட்டியதை தேசிய மக்கள் தொகை, திறனாளர் பிரிவு குறிப்பிட்டது. அது நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த எண்ணிக்கை முன்னுரைப்பு அல்லது இலக்கு அல்ல, ஆனால் திட்டமிடல் நோக்கங்களுக்காக என்று அரசாங்கம் விளக்கமளித்தது.

கடந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது பிரதமர் அலுவலக அமைச்சரான இந்திராணி ராஜா, எதிர்காலத்திற்கான திட்டமிடலில் எதிர்கால மக்கள் தொகை எப்படி இருக்கும் என்பதை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும். அளவை மட்டுமின்றி, அதன் தன்மையும் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பிறப்பு விகிதம், ஆயுள்காலம், இடம்பெயர்வு போன்ற பல்வேறு மக்கள்தொகை போக்குகள், எதிர்கால சமூக, பொருளியல் தேவைகள் உள்ளிட்ட பல காரணிகளில் இது சார்ந்துள்ளது. எனவே, அரசாங்கம் ஒற்றை அளவுகோலில் மக்கள்தொகை திட்டமிடலைத் திட்டமிடுவதில்லை என்றார் அவர்.

இந்த பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், திட்டமிடல் அளவீடு 6.9 மில்லியன் என்பது 2030களுக்கு பொருத்தமானதாக உள்ளது என்று தேசிய மக்கள் தொகை, திறனாளர் பிரிவு செவ்வாய்க்கிழமை கூறினார்.

குறிப்புச் சொற்கள்