வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூரின் அறிவார்ந்த வேளாண் துறை

வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூரின் அறிவார்ந்த வேளாண் துறை

2 mins read
7753de10-8918-4214-8d64-fda327ab635e
சாட் நிறுவனத்தின் நான்கு மிதக்கும் மீன் பண்ணைகள் பாசிர் ரிஸ் கடலோரத்தில் அமைந்துள்ளது. - படம்: சாட் நிறுவனம்
multi-img1 of 2

சிங்கப்பூரின் அறிவார்ந்த வேளாண் தோட்டங்களும் பண்ணைகளும் சீரான வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன.

தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுகளில் போதுமான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும் என்பதிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

அதேபோல் குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரிக்கவும் நீடித்த நிலைத்தன்மையை வேளாண் துறையில் தொடரவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

குறைந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் கிடைத்த சிறிய இடத்தில் சாட் (SAT) என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் அக்குவாகல்சர் டெக்னாலஜிஸ் (Singapore Aquaculture Technologies) மீன் பண்ணை மீன்களின் வளர்ப்பில் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்துகின்றன.

மீன்களின் ஆரோக்கியத்தைக் கண்காணித்தல், நீர் சூழலை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தானியங்கி கட்டமைப்பு, தரவு சேகரிப்பு போன்றவை தற்போது முக்கிய பங்காற்றுகின்றன. செயற்கை நுண்ணறிவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பாசிர் ரிஸ் கடலோரத்தில் அமைந்துள்ள சாட் நிறுவனம் நான்கு மிதக்கும் மீன் பண்ணைகளை வைத்துள்ளன.

ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 2,000 சதுர மீட்டர். அவற்றில் 60 மீன் தொட்டிகள் உள்ளன. கொடுவா, சங்கரா, கல்வா ஆகிய மீன்கள் அவற்றில் வளர்க்கப்படுகின்றன.

இப்போதுள்ள வசதிகள் 2015ஆம் ஆண்டு இருந்திருந்தால் 20,000 மீன்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று சாட்ஸ் தெரிவித்தது.

நள்ளிரவில் நீர் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீன்கள் இறந்ததால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாக அது கூறியது.

சாட் மீன் பண்ணையைப் போலவே கிரீன் ஹார்வெஸ்ட் (Green Harvest) பண்ணையும் தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்துள்ளது.

இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பில் செயல்படும் அந்தப் பண்ணைத் தொழில்நுட்பத்தின் உதவியால் காய்கறிகளைச் சிறப்பாக வளர்க்கிறது.

பண்ணையில் அதிக வெப்பம் ஏற்படும் போது நாள் ஒன்றுக்கு 40 காய்கறிப் பெட்டிகள் வீணாகின. ஆனால் இப்போது தோட்டத்தின் வெப்பத்தைத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தி நல்ல விளைச்சலைக் காணமுடிவதாக கிரீன் ஹார்வெஸ்ட் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
வேளாண்மைபண்ணைவிவசாயி