தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் ஒரு பிள்ளை குடும்பங்கள் அதிகரிப்பு

2 mins read
a3abc8d0-6263-4b91-b014-d303f081c700
ஹேசல் லிம் ஷுலெகல், அவரது கணவர் ஆன்டிரியாஸ் ஷுலெகல் இருவரும் தங்கள் மகள் ஹானா ஷுலெகலுடன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வியாளரும் ஓவியருமான ஹேசல் லிம்முக்கு ஹான்னா என்ற 12 வயது மகள் உள்ளார். ஆனால், அந்த ஒரு குழுந்தையுடன் அவர் நிறுத்திக்கொண்டார்.

அவருக்கும் அவரது கணவரான ஜெர்மானிய கல்வியாளர் ஆன்டிரியாஸ் ஷுலெகல் இருவருக்கும் வயது 49. இருவரும் ஒரு பிள்ளை போதும் என எடுத்த முடிவுக்கு குழந்தை பராமரிப்புக்கு போதுமான ஆதரவு இல்லை என்பதால்தான்.

“அடுத்த குழந்தை என்ற முடிவுக்கு போதுமான அளவு உதவி இல்லாமல் குழந்தையை வளர்க்க வேண்டியிருக்கும் என்பது ஒரு முக்கிய காரணம். ஹான்னா ஐந்து, ஆறு வயதாகும்போது நான் நாற்பது வயதுகளை எட்டிவிட்டேன். அப்பொழுது என் உடலில் முன்பிருந்த சுறுசுறுப்பு இல்லாமல் போய்விட்டது,” என்று ஹேசல் கூறுகிறார்.

இவரைப்போல் பல தம்பதியர் தங்கள் ஆற்றல், வளங்கள் அனைத்தையும் ஒரே பிள்ளைக்கு செலவிடுவது போதும் என்றும் அடுத்த குழந்தை வேண்டாம் என்று இருக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு மற்றொரு காரணம் பல தம்பதியர் குறிப்பிட்ட வயதைத் தாண்டியே திருமணம் புரிந்துகொள்வதால் பிள்ளைப்பேற்றில் கருவளப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டில் 40 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட மாதர்களிடையேயான பிள்ளைப்பேறு விகிதம் 25.1 விழுக்காடு இருந்தது. இதுவே 2014ஆம் ஆண்டு 21.6ஆகவும் 2004ஆம் ஆண்டு 16.6 விழுக்காடாகவும் இருந்தது நினைகூரத்தக்கது.

குழந்தைப் பேறுக்கான கடைசிப் பருவத்தில் உள்ள மாதர்களிடையே இன்னமும் 2 பிள்ளைகள் உள்ளதாக பிப்ரவரி 18ஆம் தேதி வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரிவினருக்கு அடுத்த நிலையில் ஒரு பிள்ளை உள்ள குடும்பங்கள் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்