தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோட்டோ குலுக்கல்: ஒரே சீட்டுக்கு 12.3 மில்லியன் வெள்ளி பரிசு

2 mins read
04d299a7-e289-4a9f-a607-3852241e9c10
யூடி பாயிண்ட் கடைத்தொகுதியிலுள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் கடையில் வெற்றிபெற்ற அந்தச் சீட்டு வாங்கப்பட்டது.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டோட்டோ அதி‌ர்‌ஷ்ட குலுக்கல் சீட்டு ஒன்று 12.3 மில்லியன் வெள்ளியை வெற்றியாளருக்கு பெற்றுத் தந்துள்ளது. 

கடந்த மூன்று குலுக்கல்களின்போது வெற்றியாளர் எவரும் இல்லாத நிலையில் இந்தச் சீட்டு வியாழக்கிழமை (ஜூன் 19) பெருந்தொகையை பெற்றுத் தந்துள்ளது.

1, 10, 37, 40, 45, 47 ஆகிய எண்கள் வெற்றி பெற்றன. கூடுதல் எண்: 19.

இயூ டி பாயிண்டிலுள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் கடையில் வெற்றிபெற்ற அந்தச் சீட்டு, குவிக்பிக் சிஸ்டம் 7 என்ட்ரி முறை வழியாக வாங்கப்பட்டது.  

இந்தச் சீட்டு ஒருவருக்கு மட்டும் சொந்தமானதா அல்லது ஒரு சிலரால் பகிரப்பட்டதா என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, பிரிவு இரண்டின் பரிசை 13 சீட்டுகள் பெற்றுள்ளன. 108,637 வெள்ளிப் பரிசுத் தொகையை அந்தச் சீட்டுகள் பகிர்கின்றன.

முன்னதாக, பிரிவு ஒன்றின் பரிசுத்தொகை, ஜூன் 9ல் பதிவான 1.3 மில்லியன் வெள்ளியிலிருந்து ஜூன் 12ல் 2.9 மில்லியன் வெள்ளிக்கு உயர்ந்தது. 

ஜூன் 16ல் செய்யப்பட்ட  குலுக்கில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவில்லை. அதற்கான பரிசுத் தொகை, 5.6 மில்லியன் வெள்ளி. 

குழு ஒன்றுக்கான பரிசுத் தொகை, நான்காவது குலுக்கல் வரையிலும் பெருகும். அதன் பிறகு, இரண்டாவது குழுவிலுள்ள வெற்றியாளர்களுக்கு இடையே பரிசுத் தொகை பகிரப்படும்.

10 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட பரிசுத்தொகை கொண்ட டாேட்டோ குலுக்கல், ஏப்ரல் 28ஆம் தேதி நடந்தது. அதில் வெற்றிபெற்ற இரண்டு சீட்டுகளுக்கு 12.9 மில்லியன் வெள்ளித் தொகையைப் பகிர்ந்தன.

மே 9ஆம் தேதி 2024ல் தனிச்சீட்டு ஒன்று வென்ற 13.1 மில்லியன் வெள்ளி, இதுவரையில் ஆகப்பெரும் தனிச்சீட்டு வெற்றி என்று சிங்கப்பூர் பூல்ஸ் உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்