சிங்போஸ்ட் உயர் அதிகாரிகள் பதவி நீக்க நடவடிக்கை குறித்து அதன் இயக்குநர் சபை விளக்கம்

2 mins read
3a2c8ca0-6ff2-4d9e-a452-26891cefff6e
(இடமிருந்து) சிங்போஸ்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் பாங், தலைமை நிதிப் பிரிவு அதிகாரி வின்சென்ட் யிக், சிங்போஸ்ட் அனைத்துல வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லி யு. - படம்: சிங்போஸ்ட்

சிங்போஸ்ட் நிறுவனம் அண்மையில் தனது தலைமை நிர்வாக அதிகாரி உட்பட மூன்று உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது.

இதைத் தொடர்ந்து அது ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29ஆம் தேதி) அந்த மூன்று அதிகாரிகளுக்கு எதிராகத் தான் எடுத்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்த நீண்ட அறிக்கையை வெளியிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் பங்குச் சந்தையில் மூன்று அதிகாரிகளான சிங்போஸ்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் பாங், தலைமை நிதிப் பிரிவு அதிகாரி வின்சென்ட் யிக், சிங்போஸ்ட் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லி யு ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, ஒழுங்குமுறை நடவடிக்கை ஆகியவற்றை சிங்போஸ்ட் வெளியிட்டது.

அந்த மூன்று அதிகாரிகளும் தாங்கள் தகுந்த காரணமின்றி பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி அதை எதிர்த்து வழக்காட உள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் சிங்போஸ்ட் நிறுவன இயக்குநர் சபையின் விளக்கம் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பகுதி ரகசியமாக ஒருவர் கொடுத்த தகவல்களின்படி, இணைய வர்த்தகத் தரவுகளை திரித்து வெளியிட்டது அடங்கும்.

சிங்போஸ்ட் அறிக்கையின் இரண்டாம் பகுதி ரகசியமாக அளிக்கப்பட்ட புகாரை அதன் உயர் அதிகாரிகள் கையாண்ட விதத்தை விவரிக்கிறது.

சிங்போஸ்ட் அறிக்கையின் முதல் பகுதி, திரு யுவின்கீழ் வரும் அனைத்துலக வர்த்தகப் பிரிவு தொடர்பானது. அதில் சிங்போஸ்ட் அனுப்ப ஒப்புக்கொண்ட பல பொட்டலங்களில் ‘டிஎஃப்’ (delivery failure), என்ற பொட்டலத்தை விநியோகிக்க முடியவில்லை என்ற குறியீடு பொறிக்கப்பட்டிருந்ததன் தொடர்பிலானது.

இதனால், பல பொட்டலங்களை விநியோகிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் அவ்வாறு விநியோகிக்க முடியவில்லை என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இதில் ரகசியமாக வந்த புகார்களின்படி, ‘டிஎஃப்’ என்ற குறியீடு ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய தண்டத் தொகையை வழங்காமலிருக்கவே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் ரகசியமாக தகவல்கள் அளித்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

இந்தப் பிரச்சினை உடனடியாக தணிக்கைக் குழுவிடம் கொண்டுசெல்லப்பட்டது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட கூடுதல் விசாரணை ‘டிஎஃப்’ என்ற விநியோகிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் முடியவில்லை என்று கூறும் குறியீடு பொறிக்கும் வழக்கம் உண்மையில் ஒப்பந்தப்படி தரவேண்டிய தண்டத் தொகையை தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிய வந்ததாக சிங்போஸ்ட் கூறுகிறது.

இதில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தணிக்கைக் குழுவினர் அளித்த அறிக்கை அந்த மூன்று அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டும் அவர்கள் அறிக்கைக்கு மறாக ரகசியத் தகவல்கள் அளித்தவர்களின் புகார்களை திரித்துக் கூறியதாக சிங்போஸ்ட் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்