ஸ்மார்ட்பேக் (Smartpac) பொட்டலங்களின் விலையை 50 காசுகள் முதல் 80 காசுகள் வரை சிங்போஸ்ட் நிறுவனம் அதிகரிக்கவுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நேரத்தில் இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட்பேக்’ பொட்டலங்களை அதிக அளவில் இணைய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
ஸ்மார்ட்பேக் பொட்டலங்களை விற்பனையாளரிடம் இருந்து அனுப்பப்படுவது முதல் அவை தகுந்த நபரிடம் சென்று சேரும்வரை கண்காணிக்க முடியும்.
பொட்டலங்களின் தயாரிப்பு விலை, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாட்டு செலவுகள் அதிகரித்ததால் இந்த விலை ஏற்றம் என்று சிங்போஸ்ட் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை மற்றும் உதவிகளை வழங்க அத்தியாவசிய செயல்பாடுகள் மிக முக்கியமான ஒன்று,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்கு ஆராய்ந்து பல திட்டங்களை வகுத்த பிறகுதான் இந்த கடினமான விலை ஏற்ற முடிவை நடைமுறைக்கு கொண்டு வந்ததாக சிங்போஸ்ட் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு சிறிய புத்தகத்தை அனுப்பப் பயன்படும் ஸ்மார்ட்பேக் பொட்டலத்தின் விலை 2.20 வெள்ளியில் இருந்து தற்போது 2.70 வெள்ளிக்கு மாறியுள்ளது. A4 தாள்கள் அளவிலான ஸ்மார்ட்பேக் பொட்டலத்தின் விலை 3 வெள்ளியாக மாறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆடைகள், மின்பொருள்கள் அனுப்ப பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்பேக் பொட்டலத்தின் விலை 3.70 வெள்ளியாக உயர்ந்துள்ளது.

