சிங்போஸ்ட் சிங்கப்பூர்ப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

1 mins read
7ee37409-5ebc-4f1c-acc1-c9b9300700e6
பதவி விலகிய சிங்போஸ்ட் சிங்கப்பூர்ப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரின் அப்தோல் சலாம் (இடம்). - படங்கள்: சிங்போஸ்ட், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்போஸ்ட் நிறுவனத்தின் உள்நாட்டுச் செயலாக்கப் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஷாரின் அப்தோல் சலாம் பதவி விலகிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அவர் இந்தப் பொறுப்பை ஏற்று இன்னும் ஓராண்டு முடிவடையவில்லை.

கடந்த 2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி சிங்போஸ்ட் சிங்கப்பூர்ப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக, திருவாட்டி நியோ சு யின்னிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார் திரு ஷாரின்.

சிங்போஸ்ட் குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட திருவாட்டி நியோ, திரு ஷாரின் பதவி விலகியதை அடுத்து, கூடுதலாகத் தலைமை நிர்வாக அதிகாரியின் பொறுப்பையும் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஷாரினின் பதவி விலகலை சிங்போஸ்ட் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தினார். நிறுவனத்துக்கு அப்பால் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் அவர் பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் சிங்போஸ்ட் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் பாங், குழுமத் தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக், அனைத்துலக வர்த்தகப் பிரிவுத் தலைவர் லி யு ஆகியோர் பதவி நீக்கப்பட்டதற்கும் திரு ஷாரின் பதவி விலகியதற்கும் தொடர்பில்லை என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்