தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் தரவு மையங்கள் அமைக்க சிங்டெல், ஹிட்டாச்சி கூட்டு முயற்சி

1 mins read
803cae00-1b94-4d74-9812-bead628b7135
புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்து நிகழ்வில் சிங்டெலின் ‘டிஜிட்டல் இன்ஃப்ராகோ’ தலைமை நிர்வாகி பில் சாங் (இடது), ஹிட்டாச்சியின் நிர்வாகத் துணைத் தலைவர் தோஷியாக்கி தோக்குநாகா. - படம்: சிங்டெல்

சிங்டெல் நிறுவனத்தின் ‘டிஜிட்டல் இன்ஃப்ராகோ’ வட்டார தரவு மையப் பிரிவான ‘என்ஸேரா’, ஜப்பான் முழுவதிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தரவு மையங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகளை ஹிட்டாச்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஆராய்ந்து வருகிறது.

சிங்டெலும் ஹிட்டாச்சியும் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வுக் குறிப்பின் ஒரு பகுதியாக இது அமைவதாக இரு நிறுவனங்களும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

‘என்ஸேரா’ ஒருபுறமிருக்க, ‘டிஜிட்டல் இன்ஃப்ராகோ’வின் தொகுப்பில் சிங்டெலின் ‘ஜிபியு’ கட்டமைப்பும் ‘பேரகான்’ தளமும் உள்ளடங்குகிறது.

ஹிட்டாச்சியின் செயற்கை நுண்ணறிவுத் தளங்களுடன் ‘பேரகான்’ தளத்தைச் சோதித்து ஒருங்கிணைக்க கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த பங்காளித்துவ முயற்சியின் விரிவாக்கமாக அண்மைய உடன்பாடு அமைவதாக சிங்டெலும் ஹிட்டாச்சியும் தெரிவித்தன.

ஹிட்டாச்சி உடனான இந்தப் பங்காளித்துவ முயற்சி, ஜப்பானியச் சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக சிங்டெலின் ‘டிஜிட்டல் இன்ஃப்ராகோ’ தலைமை நிர்வாகி பில் சாங் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்