இந்த நிதியாண்டில் ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த முதல் காலாண்டுக்கான தனது நிகர லாபம் 42.9% அதிகரித்து $690 மில்லியனாகப் பதிவானதாக சிங்டெல் தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்தில் அது $483 மில்லியனாக இருந்தது.
அந்த அதிகரிப்புக்கு $88 மில்லியன் நிகர லாபம் ஏற்பட்டதே காரணம். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் $88 மில்லியன் நிகர அசாதாரண இழப்பு ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையே, சிங்டெல்லின் நிகர லாபம் ஓராண்டுக்கு முன்னர் பதிவான $571 மில்லியனைக் காட்டிலும் 5.4% அதிகரித்து $603 மில்லியனாகப் பதிவானது.
கூடுதலான நிகர நிதிச் செலவுகள், ‘ஏர்டெல்’, ‘டெல்காம்செல்’ ஆகிய அதன் பங்காளிகளிடமிருந்து கிடைத்த குறைவான லாபப் பங்குகள் ஆகியவற்றுக்கு இடையில், இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.17 மணி நிலவரப்படி, சிங்டெல் பங்கு விலை இரண்டு காசு கூடி $2.93ஆக பதிவானது.