போட் கீயில் உள்ள சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிலை, இம்மாதம் 30ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படும்.
நவீன சிங்கப்பூரை நிறுவியவர் என்று போற்றப்படுபவர் அவர். சர் ராஃபிள்சின் சிலை சிங்கப்பூர் ஆற்றோரத்தில் அமைந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த அவர், 1819ஆம் ஆண்டு அங்குதான் முதன்முதலில் கால்வைத்ததாக நம்பப்படுகிறது.
ஜூன் 30ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், திங்கட்கிழமை (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் சிலையுடன் பொதுமக்கள் நிழற்படங்களை எடுத்துக்கொள்ள முடியாது.
வானிலை நிலவரம் தோதாக இல்லையென்றால், பராமரிப்புப் பணிகள் ஜூலை முதல்தேதிக்கு மாற்றப்படும்.
“குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளால் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். இதன் தொடர்பில் பொதுமக்களின் புரிந்துணர்வை நாடுகிறோம்,” என்று கழகம் தெரிவித்தது.


