தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வு, புத்தாக்க மையமாக மாறும் எஸ்ஐடியின் பொங்கோல் வளாகம்

1 mins read
a2f89c18-bd2c-42af-a8a2-c2fb56d728f3
தற்போது பொங்கோல் வளாகத்தில் மூன்று ஆய்வு, புத்தாக்க ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அவை 20,000 அறிவார்ந்த உணர் கருவிகள் மூலம் புதிய கட்டமைப்புடன் இணைக்கப்படும்.  - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்ஐடி) பொங்கோல் வளாகம் இவ்வாண்டு இறுதிக்குள் ஆய்வு, புத்தாக்க மையமாக மாற இருக்கிறது. இதைச் சாத்தியமாக்க ‘லிவிங் லேப் நெட்வொர்க்’ எனும் மின்னிலக்க உள்கட்டமைப்பு வளாகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கற்றல், புத்தாக்கம் தொடர்பான தரவுகளைப் பெற மாணவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த அணுகுமுறை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அணுகுமுறை குறித்து கல்வி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமை (ஜூலை 2) அறிவித்தார்.

மாணவர்களும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படத் தேவையான துடிப்புமிக்க, அதிக தரவுகளைக் கொண்ட உள்கட்டமைப்பாகப் புதிய கட்டமைப்பு திகழும் என்றார் அவர்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இரண்டு நாள் செயல்முறை சார்ந்த மாநாட்டின் திறப்பு விழாவில் டாக்டர் ஜனில் கலந்துகொண்டு பேசினார். இந்த மாநாடு அப்பல்கலைக்கழகத்தின் புதிய பொங்கோல் வளாகத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் 1,000க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழில்துறைப் பங்காளிகள், பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

என்இசி ஏஷியா பசிபிக்கின் பங்காளித்துவத்துடன் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது பொங்கோல் வளாகத்தில் மூன்று ஆய்வு, புத்தாக்க ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அவை 20,000 அறிவார்ந்த உணர் கருவிகள் மூலம் புதிய கட்டமைப்புடன் இணைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்