2026ஆம் ஆண்டில் ஆறு நீண்ட வார இறுதிகள்

1 mins read
d9de6398-1ffc-4925-958e-b77efb851772
புத்தாண்டு நாளையும் சேர்த்து 2026ஆம் ஆண்டில் மொத்தம் 11 பொது விடுமுறை நாள்கள் உண்டு.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு ஆறு நீண்ட வார இறுதி நாள்களை எதிர்பார்க்கலாம். மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட பொது விடுமுறை நாள்களின்படி இவ்வாண்டு நீண்ட வார இறுதிகள் ஆறு முறை வருகின்றன.

புத்தாண்டு நாளையும் சேர்த்து 2026ஆம் ஆண்டில் மொத்தம் 11 பொது விடுமுறை நாள்கள் உண்டு. ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளி, மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் ஆகியன வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளும் வெள்ளிக்கிழமையில் வருகிறது.

மே 31 விசாக தினம், ஆகஸ்ட் 9 தேசிய தினம், நவம்பர் 8 தீபாவளிப் பண்டிகை ஆகியன ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாகும்.

கடந்த ஆண்டு நான்கு நீண்ட வார இறுதி நாள்களும் 2024ஆம் ஆண்டு ஐந்து நீண்ட வார இறுதி நாள்களும் வந்தன.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனா, ஜப்பான், மலேசியா ஆகியவற்றுக்குச் சிங்கப்பூரர்கள் அதிகம் செல்லவிருப்பதாக டிரிப்.காம் பயணத் தளம் குறிப்பிட்டது. அவற்றுள் பேங்காக், தோக்கியோ, கோலாலம்பூர் ஆகிய நகரங்கள் முதலிடத்தில் உள்ளன.

மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட பொது விடுமுறை நாள்களின்படி இவ்வாண்டில் ஆறு முறை நீண்ட வார இறுதி நாள்கள் வருகின்றன.
மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட பொது விடுமுறை நாள்களின்படி இவ்வாண்டில் ஆறு முறை நீண்ட வார இறுதி நாள்கள் வருகின்றன. - படம்: மனிதவள அமைச்சு/ ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்