ஏப்ரல் 29ல் ஆறு பிரசாரக் கூட்டங்கள்

1 mins read
f0eca254-b878-40d6-9076-d37de6b029f3
திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடந்த மசெகவின் ஃபுலர்டன் பிரசாரக் கூட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) ஆறு தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை மாலை ஏழு மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரக் கூட்டங்கள் நடக்கும். பிரசாரக் கூட்டங்கள் நடக்கும் பகுதிகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நண்பகல் 12லிருந்து பிற்பகல் மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியின் ஃபுல்லர்டன் பிரசாரக் கூட்டத்தை நடத்தும்.

மாலை ஏழு முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஐந்து பிரசாரக் கூட்டங்கள் நடக்கும்.

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதிக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் கூட்டம் பீக்கன் தொடக்கப் பள்ளியில் நடைபெறும்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சியின் பிரசாரக் கூட்டம் பிடோக் விளையாட்டரங்கில் நடக்கும்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின், ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் பிரசாரக் கூட்டம் சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியில் (School of Science and Technology) நடக்கும்.

அங் மோ கியோ குழுத்தொகுதிக்கான மக்கள் சக்திக் கட்சியின் பிரசாரக் கூட்டம் இயோ சூ காங் விளையாட்டரங்கில் நடைபெறும்.

நீ சூன் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் (மசெக) பிரசாரக் கூட்டம் ஈசூன் விளையாட்டரங்கில் நடக்கும்.

குறிப்புச் சொற்கள்