சைனாடவுனில் ஆறு வயதுச் சிறுமி உயிரிழந்த விபத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் பெண் ஓட்டுநர்மீது புதன்கிழமை (ஏப்ரல் 8) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சிறுமியின் மரணத்தை விளைவிக்கும் வகையில் முறையான அக்கறையும் கவனமுமின்றி காரை ஓட்டிய குற்றச்சாட்டு ஒன்றையும் உரிய பராமரிப்பும் கவனமுமின்றி வாகனம் ஓட்டிய மற்றொரு குற்றச்சாட்டையும் அந்த 31 வயது மாது எதிர்நோக்குகிறார்.
அந்த மாதின் ஆறு வயது மகனைப் பொதுமக்கள் கவனத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் பாதுகாக்க, மாதின் அடையாளத்தை வெளியிடுவதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் நவீன் தேவர் கோரினார்.
சம்பந்தப்பட்ட சிறுவன் விபத்தை நேரில் பார்த்துள்ளான். மாதின் அடையாளம் வெளியிடப்பட்டால் அது அவரின் மகனுக்குக் கடுமையான மனக்காயத்தை ஏற்படுத்தும் என்று திரு நவீன் வாதிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு மேனனும் நீதிபதியும் திரு நவீனின் வாதத்தை ஏற்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் மே 13ஆம் தேதி நடைபெறும்.
விபத்தில் இந்தோனீசியாவைச் சேர்ந்த சிறுமி ஷெய்னா லஷீரா ஸ்மராடியானியும் அவரின் தாயார் ரைஷா அனின்ட்ராவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விடுமுறைக்காக அவர்கள் சிங்கப்பூர் வந்திருந்தபோது விபத்து நிகழ்ந்தது. மருத்துவமனையில் ஷெய்னாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
உரிய பராமரிப்பும் கவனிப்புமின்றி வாகனம் ஓட்டி, பிறரது மரணத்தை விளைவிப்பவர்களுக்கு மூன்றாண்டு வரை சிறைத்தண்டனையோ $10,000 வரை அபராதமோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஈராண்டு வரை சிறைத்தண்டனையுடன் $5,000 அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், எல்லாவிதமான வாகனங்களையும் ஓட்டுவதற்குக் குற்றவாளிக்குத் தடை விதிக்கப்படும்.

