தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோவில் அறிவார்ந்த மறுபயனீட்டுத் தொட்டிகள்

2 mins read
e3e6ec5e-a494-46af-ad29-b9f4f5d7ecd5
அங் மோ கியோவில் அறிவார்ந்த மறுபயனீட்டுத் தொட்டிகளின் அறிமுக நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியென் லூங் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர்க் கழிவுச் சுத்திகரிப்பு நிறுவனமான 800 சூப்பர், அறிவார்ந்த மறுபயனீட்டுத் தொட்டிகளை மேலும் 14 இடங்களில் நிறுவியுள்ளது.

பீ‌‌‌ஷான்-சின் மிங் வட்டாரத்தில் உள்ள 10 இடங்களில் முன்னோடித் திட்டமாக அந்த மறுபயனீட்டுத் தொட்டிகளைச் சோதனை செய்த நிறுவனம், கடந்த இரண்டு வாரங்களில் சிராங்கூன் நார்த், போத்தோங் பாசிர், பிரேடல் ஹைட்ஸ் ஆகிய வட்டாரங்களில் அவற்றை நிறுவியது.

மே மாதத்தில் அங் மோ கியோவில் உள்ள 37 புளோக்குகளின் கீழ்த்தளங்களிலும் அறிவார்ந்த மறுபயனீட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

800 சூப்பர் நிறுவனத்தின் மறுபயனீட்டுப் பெட்டிகளில் மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைப் போட்டு பயனீட்டாளர் ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.

பொது கழிவுகளைச் சேகரிக்க தேசிய சுற்றுப்புற அமைப்பால் நியமிக்கப்பட்ட 800 சூப்பர் நிறுவனம், அங் மோ கியோ - தோ பாயோ வட்டாரங்களில் கழிவுகளையும் மறுபயனீட்டுப் பொருள்களையும் சேகரிக்கிறது. அந்த நிறுவனம், பாசிர் ரிஸ் - பிடோக் வட்டாரத்திலும் சேவையாற்றுகிறது.

800 சூப்பர் நிறுவனம், அங் மோ கியோவில் மறுபயனீட்டுத் தொட்டிகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) அறிமுகம் செய்தது. அந்த அறிமுக நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியென் லூங் கலந்துகொண்டார்.

பயனீட்டாளர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை மறுபயனீட்டுப் பெட்டிகளில் பதிவு செய்து இரும்பு, பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, பழைய துணிகள் போன்றவற்றை அவற்றில் போடலாம்.

இதற்குமுன் பயனீட்டாளர்கள் கியூஆர் குறியீடு மூலம்தான் மறுபயனீட்டுப் பொருள்களைத் தொட்டிகளில் போடமுடியும்.

மேலும் தொட்டி நிரம்பிவிட்டதா இல்லையா என்பதைப் பயனீட்டாளர்கள் செயலி மூலம் அறிந்துகொள்ளலாம்.

அங் மோ கியோவில் வைக்கப்பட்ட 800 சூப்பர் நிறுவனத்தின் அறிவார்ந்த மறுபயனீட்டுத் தொட்டிகள்.
அங் மோ கியோவில் வைக்கப்பட்ட 800 சூப்பர் நிறுவனத்தின் அறிவார்ந்த மறுபயனீட்டுத் தொட்டிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்