சாலைத் தடத்தில் வழியை மறைத்துக்கொண்டு மெதுவாகச் சென்ற கார் ஓட்டுநர் ஒருவரை எஸ்எம்ஆர்டி பேருந்து ஓட்டுநர் சைகை மூலம் கடிந்துகொண்டார்.
அதுதொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் 2.55 மணிக்கு உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் நடந்ததாக எஸ்ஜி ரோட் விஜிலான்டே என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
காணொளியில் பேருந்துக்குமுன் கார் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. இதனால் பேருந்தால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சரியாகச் செல்ல முடியவில்லை.
இதையடுத்துப் பேருந்திலிருந்து இறங்கிய எஸ்எம்ஆர்டி ஓட்டுநர் கார் ஓட்டுநரைக் கடிந்துகொண்டார். “காருக்குமுன் எந்த வாகனமும் இல்லை பின்னர் ஏன் வழியை மறைத்துக்கொண்டு மெதுவாகச் செல்கிறீர்கள்?” என்று கை அசைவுகளால் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவம் அருகிலிருந்த வாகனத்தின் கேமராவில் பதிவாயிருந்தது. பின்னர் அது சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
சமூக ஊடகத்தில் சிலர் பேருந்து ஓட்டுநருக்குச் சாதகமாகப் பதிவிட்டுள்ளனர். அதேபோல் சில தரப்பினர் கார் ஓட்டுநருக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டுள்ளனர்.

