தன் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் தவித்த சிறுமிக்கு போனவிஸ்தா பெருவிரைவு ரயில் நிலைய(எம்ஆர்டி) ஊழியர் ஒருவர் அச்சிறுமி பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்ல உதவி செய்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடந்தது.
போனவிஸ்தா எம்ஆர்டியில் உதவி நிலைய மேலாளராகப் பணிபுரிபவர் திரு சியாஹ்ரில் உசேன்.
அவர் தன் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் பள்ளிச் சீருடையில் 10 வயது சிறுமி ஒருவர் அவரை அணுகி தன் வீட்டுக்குச் செல்ல உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
உடனே உசேனும் அவருடன் பணி புரியும் மற்றோர் ஊழியரான வாசகியும் இணைந்து தனியார் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்து, எம்ஆர்டியிலிருந்து கிட்டத்தட்ட 4 கி.மீ. தொலைவில் இருக்கும் அச்சிறுமியின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தொலைந்துப் போன ஒருவருக்கும் திரு.உசேன் உதவி செய்வது இது முதல் முறை அல்ல.
கடந்த ஏப்ரல் மாதம் அவர் போனவிஸ்தா எம்ஆர்டியில் உரிமையாளர் இன்றித் தவித்த நாய்க்கு அவருடைய உரிமையாளரைக் கண்டுபிடிக்க உதவி செய்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, திரு. உசேன் சந்தேக நபரைக் கைது செய்ய உதவியதற்காக காவல்துறையிடமிருந்து ஒரு விருதைப் பெற்றார்.

