காலாங் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் குடும்பத்துக்கு சமூக உதவி

காலாங் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் குடும்பத்துக்கு சமூக உதவி

1 mins read
குறிப்பிட்ட இடங்களில் மீன்பிடிப்பது ஆபத்தானது, எனவே அதற்கு அனுமதியில்லை: பொது பயனீட்டுக் கழகம்
24eba380-eaea-4ab6-8977-de0837c904ff
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, நண்பர்களுடன் காலாங் ஆற்றில் மீன்பிடித்து விளையாடச் சென்ற 13 வயது முகம்மது காயிம் டேனியல் புத்ரா ரோஸ்லி. முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற அவர் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினார். - படம்: பெரித் ஹாரியான்

மகனை இழந்து மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள தாயாரின் ஆறுதலுக்கென சமூகம் பல உதவிகளை வழங்கிவருகிறது.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, நண்பர்களுடன் காலாங் ஆற்றில் மீன்பிடித்து விளையாடச் சென்ற 13 வயது சிறுவன் முகம்மது காயிம் டேனியல் புத்ரா ரோஸ்லி, தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினார்.

அவனது பிரிவால் வாடும் தாயார் சிட்டிக்கு அண்டை வீட்டார்களும் சமூகத்தினரும் நன்கொடை, கல்வி நிதி, வீட்டில் பயன்படும் சாதனங்கள் என பல உதவிகளை வழங்கிவருகின்றனர். ‘சிறந்த தாயார்’ சமூகத் திட்டத்தில் உள்ளடங்கும் நடவடிக்கைகளிலும் அவரை பங்கேற்க ஊக்கமளிக்கின்றனர்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாளை திருவாட்டி சிட்டி கொண்டாடவில்லை. மாறாக, மார்ச் 21ஆம் தேதி, சுவா சூ காங் இடுகாட்டில் உள்ள மறைந்த மகனின் கல்லறையில் தனது 14 வயது, 11 வயது நிரம்பிய மற்ற இரண்டு மகன்களுடன் அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தார் தாயார் சிட்டி.

சிங்கப்பூரில் குறிப்பிட்ட இடங்களில் மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை. இதுபோன்ற சம்பவங்களைப் பொது பயனீட்டுக் கழகம் (பியுபி) கண்காணித்து விசாரணை நடத்திவருகிறது.

அவ்வாறு மீன்பிடிப்பது ஆபத்தானது எனவே அவற்றை தவிர்க்கும்படி கழகம் பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்