சிட்னி: ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டத் தடை நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறது.
இது அந்நாட்டில் உள்ள பல பதின்ம வயதினரை கவலையில் தள்ளியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் அகதியாக வாழும் 14 வயது டெரசா ஹுசைன், சமூக ஊடகங்களுக்கு எதிரான தடை திட்டம் அவரை நேரடியாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் வழி காங்கோவில் உள்ள அவரது பாட்டியுடன் தினமும் பேசி வரும் டெரசா, தடை நடவடிக்கை நடப்புக்கு வந்தால் பாட்டியுடனும் மற்ற உறவினர்களுடனான தொடர்பு துண்டிக்கப்படும் என்று வருத்தம் தெரிவித்தார்.
டெரசா போலவே ஆஸ்திரேலியாவில் உள்ள பல பதின்ம வயதினர்கள், சமூக ஊடகத் தடை தங்களுடன் நெருக்கமாக உள்ள நபர்களிடம் இருந்து பிரிவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
சமூக ஊடகம் வழி துன்புறுத்தல், அச்சுறுத்தல், பாலியல் தொல்லைகள், உடலுக்கும் மனநலத்திற்கும் கேடு என பல பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலிய அரசாங்கம் சில திட்டங்களை வகுத்து வருகிறது. அதில் வயது வரம்பும் ஒன்று.
வயது வரம்பை கட்டுப்படுத்துவதால் சில தீமைகள் இருப்பதாக வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர் . சிறுபான்மையினர், எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் உள்ளிட்ட சமூகங்கள் சமூக ஊடகம் வழி உதவிகளை பெற்றுவந்தனர், தடை திட்டம் அதை பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள 97 விழுக்காடு பதின்ம வயதினர் சராசரியாக நான்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாக அண்மை தரவுகள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் பதின்ம வயது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு கவலை தருவதாக மூன்றில் இரு பெற்றோர் கூறியுள்ளனர்.
அதனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடகங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. தடையை பதின்மவயதினரிடம் தொடங்குவது நல்ல பலனைத் தரும் என்று அது நம்புகிறது.
சமூக ஊடகத்திற்கு எதிரான திட்டமிடப்பட்ட தடை இன்னும் சட்டமாக மாற்றப்படவில்லை. அது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. அதன் வரைவை விரைவில் ஆஸ்திரேலியா சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

