அரசியல் கட்சிகளைக் குறிவைக்கும் இணையக் கணக்குகளில் உள்ள தகவல்கள் குறித்து இணையவாசிகள் கவனமாக இருக்கும்படி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) அறிவுறுத்தியுள்ளது.
அதிகாரிகள் அவர்கள் பங்கிற்கு வெளிநாட்டுத் தலையீடுகளை முறியடிக்க இணையத்தளங்களைக் கண்காணிப்பர் என்று அது குறிப்பிட்டது.
இணையப் பதிவுகள் சட்டத்துக்குப் புறம்பாக இருக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்தது.
சிங்கப்பூர் அரசியல் சிங்கப்பூரர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும் என்று அது வலியுறுத்தியது.
வேட்புமனுத் தாக்கல் தினத்துக்குச் சிறிது நேரத்துக்குமுன் வெவ்வேறு அரசியல் கட்சிகளைக் குறிவைப்பதுபோல தோன்றும் சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்பட்டதை அமைச்சு சுட்டியது.
அந்தக் கணக்குகள் குறித்து விசாரிக்கப்படுவதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.
ஒருசில கணக்குகள் சிங்கப்பூர் தொலைபேசி எண்களுடன் தொடர்புடையவை. வேறு சில அமெரிக்க எண்களைக் கொண்டு தொடங்கப்பட்டவை.
அத்தகைய கணக்குகளில் குறிப்பிட்ட ஒரு வேட்பாளரைத் தரக்குறைவாகச் சித்திரிக்கிறது. அது பெரும்பாலும் போலியாகவும் சிங்கப்பூரில் உள்ள அரசியல் கட்சிகளையும் குறிவைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கணக்குகள் பதிவேற்றப்பட்ட போலிப் படங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை.

