திரையரங்குகளில் குப்பை போடுவது அதிகரிப்பு

திரையரங்குகளில் குப்பை போடுவது அதிகரிப்பு

1 mins read
86e2e332-5f43-4512-9b74-d4bbf96cf228
கூடுதலானோர் திரையரங்குகளுக்கு வந்துசெல்வதால் அவர்கள் விட்டுச்செல்லும் குப்பையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஷா தியேட்டர்ஸ் -
Google News Preferred Icon

இங்குள்ள திரையரங்குகளில் குப்பை போடும் போக்கு அதிகரித்துள்ளது குறித்து சில திரையரங்கு நடத்துநர்கள், பொதுச் சுகாதார மன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

தெம்பனிஸ் மாலில் உள்ள திரையரங்கு ஒன்றில் குப்பை காணப்பட்டது குறித்து அண்மையில் இணையவாசி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். தரையில் உணவு, சிற்றுண்டித் தாள்கள் கிடப்பதைப் புகைப்படங்கள் காட்டின.

திரையரங்குகளில் குப்பை போடும் பிரச்சினை எப்போதும் இருந்து வந்துள்ளதைப் பொதுச் சுகாதார மன்றம் சுட்டியது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், நோய்ப் பரவலைத் தவிர்க்க உயர்தர சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை மன்றத்தின் நிர்வாக இயக்குநர் குலோரியா டான் வலியுறுத்தினார்.

"திரையரங்குகளுக்கு வந்துசெல்வோர் விட்டுச்சென்ற குப்பைகளைப் பொறுக்கும் பொறுப்பு துப்புரவாளர்களிடம் தள்ளப்படுகிறது. யாராவது குப்பை போடுவதை நீங்கள் பார்த்தால், அவ்வாறு செய்ய வேண்டாம் என அவர்களிடம் அமைதியாக எடுத்துச் சொல்லுங்கள்," என்று திருமதி டான் அறிவுறுத்தினார்.

கூடுதலானோர் திரையரங்குகளுக்கு வந்துசெல்வதால் அவர்கள் விட்டுச்செல்லும் குப்பையின் அளவு அதிகரிக்கும் என்று கேத்தே சினிபிளேக்ஸ் எதிர்பார்க்கிறது.