இணையத் தொடர்பு: சிங்டெல் வாடிக்கையாளர்கள் சிலருக்கு பாதிப்பு

இணையத் தொடர்பு: சிங்டெல் வாடிக்கையாளர்கள் சிலருக்கு பாதிப்பு

1 mins read
1e93eb88-1e93-4940-ae93-5a77f12462af
சிக்கலை விரைந்து சரிசெய்ய தங்கள் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக சிங்டெல் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்டெல் வாடிக்கையாளர்கள் சிலர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இணையத் தொடர்பைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

முந்திய நாளான திங்கட்கிழமையன்று எட்டு மணி நேரம் நீடித்த சேவைத் தடங்கலால் ஆயிரக்கணக்கான சிங்டெல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் சிங்டெல் நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. ஒரு ‘சிறிய எண்ணிக்கையிலான’ வாடிக்கையாளர்கள் மட்டும் பாதிப்பை எதிர்கொள்வதை அறிந்துள்ளோம் எனவும் இந்தச் சிக்கலானது மார்ச் 16ஆம் தேதி ஏற்பட்ட சேவைத் தடங்கலுடன் தொடர்புடையதன்று எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிக்கலை விரைந்து சரிசெய்ய தங்கள் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த சிங்டெல், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

சேவைத் தடங்கல்களைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ (Downdetector) இணையத்தளத் தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் சிங்டெல் தொடர்பான 31 புகார்கள் பதிவாயின.

பின்னர் காலை 7.18 மணிக்கு அந்த எண்ணிக்கை 213 ஆகவும் காலை 9.03 மணிக்கு 396 ஆகவும் பதிவாகின. முற்பகல் 11.20 மணி நிலவரப்படி 309 புகார்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்