தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைவருக்கும் ஏதாவது ஒன்று, தாராளமான வரவுசெலவுத் திட்டம்: நிபுணர்கள்

3 mins read
5f2c7509-3030-4871-9f32-9e93e376ad38
சிங்கப்பூரர்கள் யாரும் விடுபடாமல் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை பிப்ரவரி 18ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் தாராளமானது, அதே சமயத்தில் பொறுப்பானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தனியார் வீட்டு உரிமையாளர்கள் முதல் உணவங்காடிக் கடைக்காரர்கள், விளையாட்டு, கலைகளில் ஆர்வமுள்ளவர்கள் வரை சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த அனை[Ϟ]வருக்கும் அது ஆதரவு அளிக்கிறது.

இது, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ‘அனைத்து சிங்கப்பூரர்களுக்குமான வரவுசெலவுத் திட்டம்’ என்ற வாக்குறுதியை உறுதிப்படுத்துகிறது.

நிபுணர்கள், கவனிப்பாளர்கள், எம்.பி.க்களிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கருத்துக் கேட்டபோது, சிங்கப்பூரர்கள் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

திரு வோங்கின் அறிவிப்பு பொதுவாக இடம்பெறாத குழுக்களையும் உள்ளடக்கியிருந்தது. அனைவரையும் உள்ளடக்கும்விதமாக பரந்த அளவில் இருந்தது என்று அவர்களில் பலர் கூறினர்.

இது ஒரு சமமான அணுகுமுறையைக் கொண்ட வரவுசெலவுத் திட்டம் என்று கூறிய சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பிரிவுத் தலைவர் இயூஜின் டான் சமூகம், பொருளியல் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

முக்கியப் பிரச்சினைகள் சமநிலையுடன் கையாளப்பட்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் பல தலைமுறைகளின் கவலைகள், தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் வரவுசெலவுத் திட்டமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அது மட்டுமல்லாமல் நாட்டின் தனியார், பொது வீடமைப்புகளில் வசிப்பவர்களுக்கு இடையே நாட்டின் வளத்தை பகிர்ந்துகொள்வதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உதவித் திட்டங்கள் தனியார் சொத்து உரிமையாளர்கள் வரை நீட்டிக்கப்பட்டதை பல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உதவி அல்லது ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்படும்போது தாங்கள் விடுபட்டுவிடுவதாக இக்குழுவினர் பொதுவாக கருதுவது வழக்கம். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும் வகையில் 2025 வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.

பிரதமர் வோங், தனியார் வீடுகளில் வசிக்கும் அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் தலா $400 மதிப்பிலான பற்றுச்சீட்டைப் பெறுவார்கள் என்று அறிவித்திருந்தார்.

இது, தற்போதைய பருவநிலை பற்றுச்சீட்டின் விரிவாக்கமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க வழங்கப்பட்டுள்ளது.

இவை தவிர, மூத்தோர் துடிப்புடன் மூப்படையும் திட்டம் மேம்படுத்தப்படுவதாகவும் பிர[Ϟ]தமர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, முதியோருக்கான வசதிகளை வீட்டில் செய்துகொள்ள அரசாங்கம் பணம் வழங்கும். இது, தனியார் வீடுகளில் வசிக்கும் முதியோர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தனியார் வீட்டு உரிமையாளர்கள் தாங்களே தங்களை [Ϟ]கவனித்துக்கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

ஆனால், அவர்களில் சிலருக்கு உதவி தேவைப்படலாம் என்று அறிவிப்புகள் காட்டுவதாக சிஜிஎஸ் இன்டர்நேஷனலின் பொருளியல் ஆலோசகரான திரு சாங் செங் வுன் கூறினார்.

பலருக்கு சொத்து இருக்கலாம், ஆனால் பணம் இருக்காது என்பதால் உதவி தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

அரசாங்கம் அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நடத்து[Ϟ]நர்களால் நடத்தப்படும் உணவங்காடி நிலையங்களில் உள்ள கடைகளுக்கு ஒருமுறை வாடகை ஆதரவாக $600 வழங்கப்படும் என்று தமது வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் வோங் அறிவித்திருந்தார்.

மேலும், பழைய உணவங்காடி நிலையங்களுக்குப் பதிலாக புதியவற்றைக் கட்டுவதற்கும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் $1 பில்லியன் வரை ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் உணவங்காடிக் கடைக்காரர்களுக்கும் இடமளித்திருப்பது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்று திரு சாங் கூறினார்.

2025ல் பயனடையும் மற்றொரு குழு, முன்னாள் குற்ற[Ϟ]வாளிகள். வேலை நியமன உதவித் தொகை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் வோங் கூறியிருந்தார். இதன் மூலம் முன்னாள் குற்றவாளிகள் ஊதியத்தில் முதல் ஒன்பது மாதங்கள் வரை 20 விழுக்காடு ஈடுகட்டும் திட்டம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சக்தியாண்டி சுபாட், முன்னாள் குற்றவாளிகளுக்கு அதிக ஆதரவு அளித்திருப்பது நல்ல செய்தி என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்லாரன்ஸ் வோங்சிங்கப்பூரர்