கடன்களைத் தீர்க்க வீட்டை விற்குமாறு வளர்ப்புத் தாயிடம் வாக்குவாதம் செய்த ஆடவர் ஒரு கட்டத்தில் தாயின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார்.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மகனின் செயலிலிருந்து தப்பிய தாய், ஜனவரி 18ஆம் தேதி உடல்நலப் பிரச்சினைக்காக மருந்தகம் சென்றிருந்தார். அங்கு மருத்துவரிடம் தமது வேதனையைத் தெரிவித்தபோது மருத்துவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
யோங் சுன் ஹோங் என்னும் 36 வயது சிங்கப்பூர் ஆடவரின் நடவடிக்கைக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
யோங்கிற்கு அவரது மறைந்த வளர்ப்புத் தந்தையின் சொத்துமூலம் கிட்டத்தட்ட 45,000 வெள்ளி கிடைத்தது. அதை அனைத்தையும் அவர் இரவு விடுதிகளில் செலவிட்டு அழித்தார்.
அதன்பின்னர் செலவுகளுக்காகச் சட்டவிரோதமாகக் கடன் வழங்கும் நபர்களிடம் பணம் வாங்கினார் யோங்.
கடன் அதிகரித்ததால் 78 வயது வளர்ப்புத் தாயிடம் வீட்டை விற்கச்சொல்லி வற்புறுத்தி பிரச்சினை செய்தார் யோங்.
அடிக்கடி வாக்குவாதம் செய்த யோங் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தனது தாய் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார்.
யோங் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
யோங்கின் குற்றச்செயலுக்கு 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கச் சட்டத்தில் இடம் உண்டு.