$14.5 பில்லியன் லாபம் ஈட்டிய தென்கிழக்காசிய மின்னிலக்கப் பொருளியல்

1 mins read
16644c40-ff5b-4620-9e4f-aa3e9b7ee61c
பெயின் அண்ட் கம்பனி, தெமாசெக், கூகல் ஆகியவை வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் மூலம் மின்னிலக்கப் பொருளியல் ஈட்டிய லாபம் குறித்து தெரியவந்துள்ளது. - படம்: பெயின் அண்ட் கம்பனி, தெமாசெக், கூகல்

தென்கிழக்காசியாவின் மின்னிலக்கப் பொருளியல் 2024ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் (S$14.5 பில்லியன்) லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரண்டரை மடங்கு அதிகம்.

இத்துறையின் மொத்த வருமானமான 89 பில்லியன் அமெரிக்க டாலரில் ஈட்டப்பட்ட லாபம் 12 விழுக்காடு மட்டுமே.

இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக அது 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

மின்னிலக்கப் பொருளியலின் லாபம் அதிகரிப்பதற்கு இணைய ஊடக நிறுவனங்கள் முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி ஒளிபரப்பு, இசை ஒலிபரப்பு, இணைய விளையாட்டுகள், பிரத்தியேகக் காணொளி உள்ளடக்கம் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மின் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் உணவு தொடர்பான செயலிகள் இழப்பைச் சந்தித்தன.

ஆனால் அவற்றின் இழப்பு குறைந்துள்ளது.

வலுவான சந்தைப்படுத்துதல், புதிய பொருள்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டது ஆகியவை இதற்குக் காரணமாக அமைந்தன.

பெயின் அண்ட் கம்பனி, தெமாசெக், கூகல் ஆகியவை வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மின்னிலக்கம்பொருளியல்லாபம்