விளையாட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் ‘ஸ்பெக்ஸ் எஸ்ஜி’ அறிமுகம்

விளையாட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் ‘ஸ்பெக்ஸ் எஸ்ஜி’ அறிமுகம்

1 mins read
986ae9a4-f0c0-4060-9d44-7d9e7d2c7fe2
வயது, திறன்கள் என எல்லாவற்றையும் கடந்து, அனைத்து சிங்கப்பூரர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி விளையாட்டு என்றார் கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு/யுடியூப்

விளையாட்டாளர்களின் வாழ்க்கை மேலாண்மைத் திறன்களை விரிவாக்க, உயர்கல்வி, தொழில் மேம்பாடு, குடும்பம், சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல வகைகளில் ஆதவளிக்கும் ‘ஸ்பெக்ஸ் எஸ்ஜி’ வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் காணவுள்ளது.

உயர் ரக விளையாட்டுக் கழகம், சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, ‘அன்லீ‌ஷ் தி ரோர்’ இயக்கம் ஆகியவற்றை இணைத்து சிங்கப்பூர் விளையாட்டுத் துறையின் அடுத்த அத்தியாயத்தைச் சிறப்பாக அமைக்க இந்த வலுவான அமைப்பு உருவாகிறது.

விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு விளையாட்டாளர்களுக்குக் கூடுதல் ஆதரவாக அமையும் என்றார் கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ.

விளையாட்டாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவு, வளர்ச்சிப் பாதைகள் குறித்த புரிதல், நிபுணத்துவம் உள்ளிட்ட பல அம்சங்களில் இப்புதிய அமைப்பு கவனம் செலுத்தும்.

மேலும், விளையாட்டு தொடர்பில் பல பள்ளிகள் ஒன்றிணைந்த இணைப்பாட நடவடிக்கை அணிகளை அமைக்க புதிய $10 மில்லியன் மானியத்தையும் அறிவித்தார் திரு நியோ.

இதன்கீழ் ஒவ்வோர் அணியும் நான்கு ஆண்டுகளில் $200,000 வரை பெறும். இதன் ஒரு பகுதியைப் போக்குவரத்துக்கும் பயிற்சிக்கும் பயன்படுத்த முடியும்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் உத்திபூர்வப் பங்காளித்துவம் உள்ளதால் மாணவர்கள், தாங்கள் விரும்பும் இணைப்பாட நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்