அடுத்த ஆண்டு 4 நீண்ட பொது விடுமுறை வார இறுதிகள்

அடுத்த ஆண்டு 4 நீண்ட பொது விடுமுறை வார இறுதிகள்

1 mins read
2ae41f09-8ccb-4811-b5e5-8edf52a3b487
2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்கள் பட்டியலை மனிதவள அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025), நான்கு நீண்ட வாரயிறுதி விடுமுறைகள் வரும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 11 நாள்கள் பொது விடுமுறை தினங்களாகும்.

அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியலை மனிதவள அமைச்சு, ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிட்டது.

நோன்புப் பெருநாள், விசாக தினம், தீபாவளி ஆகியவை திங்கட்கிழமைகளில் அமைவதால் அவற்றுக்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து நீண்ட விடுமுறைக்காலமாக அமையும்.

ஹஜ்ஜுப் பெருநாளும் தேசிய தினமும் சனிக்கிழமைகளில் வருகின்றன.

அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள், புத்தாண்டு - ஜனவரி 1, சீனப் புத்தாண்டு - ஜனவரி 29, 30, நோன்புப் பெருநாள் - மார்ச் 31, புனித வெள்ளி - ஏப்ரல் 18, மே தினம் - மே 1, விசாக தினம் - மே 12, ஹஜ்ஜுப் பெருநாள் - ஜூன் 7, தேசிய தினம் - ஆகஸ்ட் 9, தீபாவளி - அக்டோபர் 20, கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 ஆகியவையாகும்.

பட்டியல்:
பட்டியல்: - மனிதவள அமைச்சு இணையத்தளத் தகவல்களின் அடிப்படையில் தமிழ்முரசு
குறிப்புச் சொற்கள்