ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயக் குடமுழுக்கு: பேருந்துச் சேவைகளில் மாற்றம்

ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயக் குடமுழுக்கு: பேருந்துச் சேவைகளில் மாற்றம்

1 mins read
eb48c3ac-e9bc-485d-b9b7-e9ce0bd5f1e3
ஜூன் 18ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள ஈசூன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம். - படம்: வித்யா வெங்கடேசன்
Google News Preferred Icon

ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத் திருக்குட நன்னீராட்டு விழா ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.

அதனை முன்னிட்டு, அதிகாலை பேருந்துச் சேவை தொடங்கும் நேரத்திலிருந்து மாலை 6 மணிவரை ஈசூன் அவென்யூ 3 சாலையில் பேருந்துச் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

தற்காலிகப் பாதை மாற்றத்தால் சேவை எண் 169 மற்றும் 860 பேருந்துகள் சில நிறுத்தங்களைத் தவிர்க்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈசூன் அவென்யூ 3 ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிர்ப்புறம், செம்பவாங் சாலை புளோக் 722, செம்பவாங் சாலை புளோக் 722க்கு எதிர்ப்புறம் ஆகிய நான்கு நிறுத்தங்களில் அந்தப் பேருந்துகள் நிற்காமல் செல்லும்.

இது குறித்த கூடுதல் தகவல் அறிய https://go.gov.sg/smmt-kumbhabishegam2026 என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்