தொழில்நுட்ப, பொறியியல் குழுமமான ‘எஸ்டி என்ஜினியரிங்’ அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய தரவு நிலையம் ஒன்றில் $120 மில்லியனை முதலீடு செய்கிறது.
அந்தத் தரவு நிலையம் உயர் பாதுகாப்பையும் எரிசக்திச் செயல்திறன் தரங்களையும் கொண்டிருக்கும்.
2026ஆம் ஆண்டில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் அந்தத் தரவு நிலையம், சிங்கப்பூரில் ‘எஸ்டி என்ஜினியரிங்’ன் மொத்தக் கொள்ளளவை 30 மெகாவாட்டுக்கும் மேல் அதிகரிக்கும்.
ஜாலான் பூன் லேயில் உள்ள ‘எஸ்டி என்ஜினியரிங் நில முறைகள்’ (ST Engineering Land Systems’) பகுதியில் அமைந்துள்ள 6,000 சதுர அடி பரப்பளவிலான அந்த ஏழு மாடிக் கட்டடம், இங்கு இருக்கும் அந்தக் குழுமத்தின் நான்காவது தரவு நிலையமாகும்.
புதிய தரவு நிலையத்தில் 2,400 சதுர மீட்டர் பரப்பளவிலான சூரியத் தகடுகள் இருக்கும். அவை ஒன்பது டென்னிஸ் கூடங்களின் பரப்பளவுக்குச் சமம்.
ஒரு நாளுக்குக் குறைந்தது ஆறு மணி நேரம் சூரிய ஒளியைப் பெறவேண்டிய அந்தத் தகடுகளால், கட்டடத்தின் பெரும்பாலான மின்சாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“தரவு நிலையத் துறை விரிவடைந்துவரும் நிலையில், நாம் தொடர்ந்து புத்தாக்கங்களைச் செய்து, எரிசக்திச் செயல்திறனை அதிகரிக்க, எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிகம் செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“தரவு நிலையங்களுக்குப் புதிய பசுமை எரிசக்தி வளங்களை ஆய்வு செய்வது, சிங்கப்பூர் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிசக்திக்கு மாற துணை புரியும் என்பதே அதற்குக் காரணம்,” என்றார் அவர்.

