எஸ்டி என்ஜினியரிங்: இரண்டாம் அரையாண்டு லாபம் 83.6% சரிவு

எஸ்டி என்ஜினியரிங்: இரண்டாம் அரையாண்டு லாபம் 83.6% சரிவு

1 mins read
52d58bb1-5516-45f9-8855-5e75329372dc
எஸ்டி என்ஜினியரிங் நிறுவனம் அதன் இரண்டாம் அரையாண்டு நிகர லாபம் 83.6 விழுக்காடு சரிந்து $59.9 மில்லியனாகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்டி என்ஜினியரிங் நிறுவனம் அதன் இரண்டாம் அரையாண்டு நிகர லாபம் 83.6 விழுக்காடு சரிந்து $59.9 மில்லியனாகப் பதிவானதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது. ஒப்புநோக்க, ஓராண்டுக்கு முன்பு அது $365.7 மில்லியனாக இருந்தது.

லீபாய் (LeeBoy) எனும் கிளை நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளை எஸ்டி என்ஜினியரிங் மீட்டுக்கொண்டதால் ஈட்டப்பட்ட லாபம், ‘சிட்டிகேப்’, ‘எஸ்பிடெல்’, ‘ஸ்டார்கோ’ ஆகியவற்றில் பங்குதாரராகக் காட்டிய முனைப்பு, ‘ஐடைரக்ட்’ குழுமம், ‘ஜெட்-டாக்’ ஆகியவை தொடர்பான ஒருமுறை மட்டும் ஏற்பட்ட இழப்பு ஆகியவை லாபம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்.

இவ்வேளையில், எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தின் இரண்டாம் அரையாண்டுக்கான செயலாக்க லாபம் 22.5 விழுக்காடு அதிகரித்து $448 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் வருவாயும் 12 விழுக்காடு அதிகரித்து $6.43 பில்லியனானதாகக் கூறப்பட்டது.

சென்ற ஆண்டு முழுவதற்குமான நிகர லாபம் 34.1 விழுக்காடு குறைந்து $462.8 மில்லியனாகப் பதிவானது. சென்ற ஆண்டு முழுவதற்குமான வருவாய் 9.5 விழுக்காடு அதிகரித்து $12.34 பில்லியனானது.

இந்நிலையில், ஒரு பங்கிற்கு 6 காசு லாப ஈவுத்தொகையாக வழங்குவதற்கும் சிறப்பு ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 5 காசு வழங்கலாமென்றும் நிறுவன இயக்குநர் வாரியம் பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்