குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் விதமாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதி (Straits Times Pocket Money Fund) வழங்கப்படுகிறது.
நிதி ஆலோசனை அமைப்பான பிஎஃப்பிஎஃப்ஏ ( PFPFA) நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு 164,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
பிஎஃப்பிஎஃப்ஏ நிறுவனம் சனிக்கிழமை (அக்டோபர் 11) நடந்த நிதித் திரட்டு நிகழ்ச்சியில் 100,000 வெள்ளிக்கான காசோலையைக் கொடுத்தது. மேலும், நிதித் திரட்டு நிகழ்ச்சியின்போது கிடைத்த 64,000 வெள்ளியும் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு பிஎஃப்பிஎஃப்ஏ நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியுடன் சேர்ந்து பேக்ஸ் ஆஃப் ஜாய் (Bags of Joy) திட்டத்தில் கலந்துகொண்டது.
300 குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் பேரங்காடிப் பற்றுச்சீட்டுகளும் அந்தப் பைகளில் இருந்தன. அத்துடன் கூடுதலாக 90,000 வெள்ளி நன்கொடையையும் நிறுவனம் வழங்கியது.
2007ஆம் ஆண்டு முதல் பிஎஃப்பிஎஃப்ஏ நிறுவனம் நிதித் திரட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
நிறுவனம் இதுவரை 800,000 வெள்ளி நிதி திரட்டியுள்ளது. திரட்டப்படும் நிதியைக் கல்வி மற்றும் சிறப்புத் தேவை உடைய குழந்தைகளுக்கு அது வழங்கி வருகிறது.
2000ஆம் ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதித் திட்டத்தைத் தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அதன்கீழ் இதுவரை 100 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 220,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.