பள்ளிக் கைச்செலவு நிதிக்கு $100,000 நன்கொடை

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு உள்ளூர் நிறுவனமான ‘எச்எம்டபிள்யூ ஏர் கண்டிஷனிங்’ 100,000 வெள்ளி நன்கொடை அளித்துள்ளது.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குமுன் அத்திட்டம் குறித்து செய்தித்தாள் வழியாக அறிந்தபோது, தாங்களும் அதற்குப் பங்களிக்க வேண்டும் என்று ‘எச்எம்டபிள்யூ’ நிறுவனத்தின் இயக்குநர்களான திரு ஹோ மன் வெங்கும் திருவாட்டி இங் ஆய் யென்னும் விரும்பினர்.

இந்நிலையில், அந்நிறுவனம் தொடங்கப்பட்டு இவ்வாண்டுடன் 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்கள் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றினர்.

விலைவாசி உயர்ந்து வருவதாலும் குறைந்த வருமானக் குடும்பங்கள் நிதிப் பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடும் என்பதாலும், இப்போது நன்கொடை அளிக்க முடிவுசெய்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திருவாட்டி இங், 56, கூறினார்.

“மாணவர்களுக்கு உதவும்போது, அது அவர்களுக்கு நல்ல தொடக்கத்தைத் தரும் என்றும் எதிர்காலத்தில் அவர்களும் சமுதாயத்திற்குப் பங்களிப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றார் 76 வயதான இங்.

கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், எஸ்டி பள்ளிக் கைச்செலவு நிதியின்மூலம் இதுவரை 210,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு $97 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!