உடற்குறையுள்ளோர்க்கு வேலை வழங்கியவருக்கு ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருது

3 mins read
‘டிக்னிடி கிச்சன்’ உணவங்காடியைத் தோற்றுவித்த கோ செங் சூனுக்கு அங்கீகாரம்
58e7c6df-ce8d-43cd-827c-1ba35289e720
தற்போது, திரு கோ செங் சூனின் ‘டிக்னிடி கிச்சனில்’ கிட்டத்தட்ட 200 பேர் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் உடற்குறையுள்ளோர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2010ஆம் ஆண்டு முதல் உடற்குறையுள்ளோர்க்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் உணவங்காடியைத் தோற்றுவித்த திரு கோ செங் சூனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

‘டிக்னிடி கிச்சன்’ எனும் அந்த உணவங்காடி செயல்படத் தொடங்கியதும் முதல் நான்கு ஆண்டுகளுக்கு அன்றாடம் 1,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டதால் அவர் தமக்கு ஊதியம் எடுத்துக்கொள்ளவில்லை.

பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பதின்ம வயதிலிருந்த இரு மகன்களுக்கு ஆதரவு வழங்கவும் அவர் ஐந்து வேலைகளைச் செய்தார்.

ஆசிரியர், ஆலோசகர், கணக்குத் தணிக்கையாளர் எனப் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார்.

தற்போது 65 வயதாகும் அவர் 1984ஆம் ஆண்டு பணி நிமித்தமாக பிரிட்டன், சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றிருந்தார்.

ஏழைகளும் உடற்குறையுள்ளோரும் படும் சிரமங்களைப் பார்த்ததால் அவருக்குச் சமூகத்துக்குத் திருப்பித் தரவேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டது.

தற்போது ‘டிக்னிடி கிச்சனில்’ கிட்டத்தட்ட 200 பேர் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் உடற்குறையுள்ளோர்.

மேலும், 2,000க்கு மேற்பட்டோருக்கு திரு கோ பயிற்சி அளித்துள்ளார். ஒற்றைப் பெற்றோர், முன்னாள் கைதிகள் போன்றோரும் அவர்களில் அடங்குவர். உணவு-பானத் துறை, சில்லறை விற்பனைத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலை செய்வதற்கான திறன்களை அவர்களுக்கு அவர் பயிற்றுவித்தார்.

பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து திரு கோ, 2024ஆம் ஆண்டுக்கான ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருதைப் பெற்றுக்கொண்டார்.

திரு கோ செங் சூன், 2024ஆம் ஆண்டுக்கான ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருதை பிப்ரவரி 24ஆம் தேதி, அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.
திரு கோ செங் சூன், 2024ஆம் ஆண்டுக்கான ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருதை பிப்ரவரி 24ஆம் தேதி, அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து பெற்றுக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல்வேறு வழிகளில் மிகச் சிறப்பாகச் செயலாற்றிய சிங்கப்பூரர்களை இந்த விருது கௌரவப்படுத்துகிறது. நம்பிக்கையை விதைக்கும் தொண்டூழியர்கள், சிரமப்படுவோருக்கு வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவர்கள், சிங்கப்பூரை உலக அரங்கில் பெருமைப்படுத்தும் கலைஞர் அல்லது விளையாட்டாளர் என நாம் அனைவரும் பெருமை கொள்ளத்தக்க வகையில் செயலாற்றியவர்களை இது சிறப்பிக்கிறது என்று அதிபர் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஏற்பாட்டில் 10வது ஆண்டாக நடைபெறும் இந்த விருதளிப்பு நிகழ்ச்சி சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்த தனிநபர் அல்லது குழுவை அங்கீகரிக்கிறது.

யுபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மில்லெனியம் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் ஆகியவை இந்த விருதுக்கான புரவலர்கள்.

திரு கோவிற்கு வெற்றிக் கோப்பையுடன் 20,000 வெள்ளி ரொக்கமும் மில்லெனியம் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்சில் ஐந்து இரவுகள் தங்குவதற்கான அனுமதியும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ‘பிஸ்னஸ்’ வகுப்பில் பயணம் செய்ய இருவருக்கான விமானச் சீட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், புதிதாக ‘இளைய சிங்கப்பூரர்’ எனும் விருது அறிமுகம் காண்பதாகதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை, தன்னலமற்ற செயல், துணிச்சல் ஆகியவற்றின் வாயிலாகச் சமூகத்திற்குப் பங்களித்த இளம் சிங்கப்பூரர்களை அங்கீகரிப்பது இதன் நோக்கம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் ஜெய்மி ஹோ, பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில் புதிய விருதுப் பிரிவுகள் குறித்து அறிவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் ஜெய்மி ஹோ, பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில் புதிய விருதுப் பிரிவுகள் குறித்து அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக அரங்கில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்திய சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிறுவனங்களுக்கான புதிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு விருதுகளும் 2025ஆம் ஆண்டுக்கான ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருதுகளுடன் சேர்க்கப்படும்.

இஸ்தானாவில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் ஜெய்மி ஹோ புதிய விருதுகள் குறித்து அறிவித்தார்.

இவ்வேளையில், பிப்ரவரி 24 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை ‘சிங்கப்பூர் சைலன்ட் ஹீரோ’ விருதுக்கு நியமனங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்