தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலையான பரிசு வழங்கும் புதிய டோட்டோ விளையாட்டு ஜூன் 12ல் தொடங்கும்

2 mins read
b3eea9f1-49b7-436d-bd65-d4125b6c6420
ஜூன் 10 முதல் அனைத்து சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் டோட்டோ மேட்ச் ஆட்டத்திற்கான விற்பனை கிடைக்கப்பெறும். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர் பூல்ஸ், ‘டோட்டோ மேட்ச்’ எனும் புதிய நிலையான (fixed) பந்தய விளையாட்டை ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் குலுக்கலில் அறிமுகப்படுத்தவுள்ளது.

மாறிவரும் சந்தைப் போக்குகளுக்கு தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஒரு பகுதியாக சிங்கப்பூர் பூல்ஸ் இந்தப் புதிய விளையாட்டைத் தொடங்கவுள்ளது.

டோட்டோ விளையாட்டில் நிலையான வழங்குதொகை முறைக்கான பயனீட்டாளர்களின் விருப்பத்துக்குப் பதிலளிக்கும் விதமாக இப்புதிய விளையாட்டு தொடங்கப்படுவதாக சிங்கப்பூர் பூல்ஸ் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டது.

‘ஜாக்பாட்’ பரிசை பந்தயக்காரர்கள் வெல்லக்கூடிய வழக்கமான டோட்டோ விளையாட்டைப் போலல்லாமல், பந்தயம் செலுத்தப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் நிலையான பரிசுத் தொகையை டோட்டோ மேட்ச் வழங்கும். எனவே, அதிக பந்தயம் செலுத்துவதால் பரிசுத்தொகையும் கூடும்.

விளையாடுவதற்கு, பந்தயக்காரர்கள் இரண்டு விளையாட்டு வகைகளின்கீழ் பந்தயம் கட்டலாம். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு வகையையும் விளையாடலாம்.

முதலாவது வகையின்படி, ஒன்று முதல் 49 வரையிலான இரண்டு முதல் நான்கு எண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட டோட்டோ குலுக்கலுக்கான ஆறு வெற்றி எண்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எண்களும் இடம்பெற்றால் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இந்த வகைக்கு, ஒரே பந்தயத்தில் எத்தனை எண்களை பந்தயக்காரர் தேர்ந்தெடுக்கிறார் என்பதன் அடிப்படையில் பரிசுகள் வேறுபடுகின்றன. பந்தயம் செலுத்தப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும், பந்தயக்காரர்கள் இரண்டு பொருந்திய எண்களுக்கு $50, மூன்று எண்களுக்கு $500, நான்கு எண்களுக்கு $7,000 வெல்லலாம்.

இரண்டாவது விளையாட்டு வகையில், ஒன்று முதல் 49 வரையிலான ஓர் எண்ணை பந்தயக்காரர்கள் தேர்வுசெய்யலாம். இந்த எண், அந்த டோட்டோ குலுக்கலுக்கான கூடுதல் எண்ணுடன் பொருந்தினால் பந்தயம் செலுத்தப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் அவர்கள் $30 வெல்வார்கள்.

பரிசுக்குத் தகுதிபெற பந்தயக்காரர்கள் ‘டோட்டோ மேட்ச்’ வகைக்கு பந்தயம் வைக்க வேண்டும். சாதாரண டோட்டோ பந்தயத்தை வைப்பது பரிசுக்குத் தகுதிபெறாது.

ஜூன் 10 முதல் அனைத்து சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் டோட்டோ மேட்ச் ஆட்டத்திற்கான விற்பனை கிடைக்கப்பெறும்.

குறிப்புச் சொற்கள்