தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டார்ஹப்: கைப்பேசி சேவைத் தடங்கல் சரிசெய்யப்பட்டுவிட்டது

1 mins read
09256bfc-53bb-42be-a6b3-aed8fc137870
சேவைத் தடங்கலால் ஸ்டார்ஹப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் அக்டோபர் 29ஆம் தேதி காலை பாதிக்கப்பட்டனர். - படம்: ஸ்டார்ஹப்

பல மணி நேரத்துக்கு நீடித்த கைப்பேசி சேவைத் தடங்கல் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அது வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் ஸ்டார்ஹப் நிறுவனம் அக்டோபர் 29ஆம் தேதி தெரிவித்தது.

அக்டோபர் 29ஆம் தேதி காலை ஸ்டார்ஹப் நிறுவனத்தின் கைப்பேசி சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

சேவைத் தடங்கலால் ஸ்டார்ஹப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களால் கைப்பேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து 2,000க்கும் அதிகமான புகார்கள் பதிவானதாக சேவைத் தடங்கலைக் கண்காணிக்கும் தளமான ‘டவுன்டிடெக்டர்’ தெரிவித்தது.

பதிவான புகார்களில் பெரும்பாலானவை கைப்பேசி வழி இணையச் சேவையுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டது.

சமிக்ஞை கிடைக்கவில்லை என்று சிலர் புகார் செய்திருந்தனர்.

அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சேவைத் தடங்கல் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்