அரசு ஆணைபெற்ற இரு புதிய கழகங்கள்

அரசு ஆணைபெற்ற இரு புதிய கழகங்கள்

1 mins read
170569e1-6623-40fe-9b8f-1f843cd2d64e
-

ஊழி­யர் திறன் மேம்பாடு, வேலை­வாய்ப்பு போன்ற­வற்­றில் தேசிய அள­வில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் 'ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர் (எஸ்­எஸ்ஜி), ஊழி­யர்­அணி சிங்கப்­பூர் (டபிள்­யூ­எஸ்ஜி) என அர­சாங்க ஆணை­பெற்ற இரண்டு கழ­கங்கள் அறி­மு­கப்­படுத்­தப்­படு­கின்றன. ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர் எனப்­படும் எதிர்­கா­லத் திறன் வளர்ச்­சித் திட்­டத்திற்­கான கழ­கம் கல்வி அமைச்­சின் கண்­ கா­ணிப்­பி­லும் 'டபிள்­யூ­எஸ்ஜி' எனப்­படும் 'ஊழி­யர் அணி சிங்கப்­பூர்' எனும் கழ­கம் மனித வள அமைச்­சின் கண்­கா­ணிப்­பி­லும் செயல்­படும். இதனை இந்த இரு அமைச்­சு­களும் இணைந்து வெளி­யிட்ட செய்தி அறிக்கை­யில் தெரி­விக்கப்பட்டுள்­ளது.

எஸ்­எஸ்ஜி எனப்­படும் 'ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர்' வாழ்­நாள் கல்வி, கல்­வியை­யும் வாழ் நாள் முழு­தும் பெறும் பயிற்­சியை­யும் ஒருங்­கிணைத்­தல் போன்ற­வற்­றில் கவ­னம் செலுத்­தும் என்றார் பொரு­ளி­யல், சமூக கொள்கை­களுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­சருமான தர்­மன் சண்­மு­க­ரத்­னம். ஊழி­யர் அணி சிங்கப்­பூர் (டபிள்­யூ­எஸ்ஜி) என்­னும் மனித வள அமைச்­சின் முகவை, நமது பொரு­ளி­யலை வலு­வாக்­கும் துறை­கள் ஒவ்­வொன்­றி­லும் வலு­வான சிங்கப்­பூ­ரர்களை உரு­­வாக்­கு­­வது, குறைந்த மனித வளத்­து­டன் போட்­டியைச் சமா­ளிக்­கும் வகை­யில் நிறு­வ­னங்களுக்கு உத­வு­வது ஆகிய பணி­களைச் செய்­யும்.

ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் கண்காட்சியில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை மக்கள் தெரிந்துகொள்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்