பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையில் கார் வாங்குபவர்களுக்கு அதிக சிஓஇ

1 mins read
ee84f54f-a63a-4b25-bc6c-b081b4194636
-

வரும் பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையில் 'சிஓஇ' எனும் வாகன உரிமைச் சான்றிதழ்களை அதிகம் எதிர்பார்க்கலாம். அந்தக்கால கட்டத்தில் மாதம் சுமார் 8,403 வாகன உரிமைச் சான்றிதழ்கள் இருக்கும். கடந்த காலாண்டில் மாதம் 7,214 வாகன உரிமைச் சான்றி தழ்கள் இருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில் 16.4 விழுக்காடு அளவுக்கு சிஓஇ கூடுகிறது.

சிறிய கார்களுக்கான பிரிவில் மட்டும் (1,600 சிசி வரை) கார் வாங்குபவர்களுக்கு 22.5% கூடுதலாக சிஓஇக்கள் கிடைக் கும். அதாவது மாதம் 3,313லிருந்து 4,057க்கு சிஓஇக்களின் எண் ணிக்கைகள் அதிகரிக்கிறது. பொதுப் பிரிவிலும் குறிப் பிடத்தக்க அளவு சிஓஇக்களின் எண்ணிக்கை கூடும். எல்லா வகையான வாகனங் களும் இந்தப் பிரிவின்கீழ் வாங்கப்படுகின்றன. இருப்பினும் ஆடம்பர கார்களை வாங்குபவர்களே பொதுப்பிரிவை வழக்கமாக பயன்படுத்துகின்றனர்.