ஜூரோங் பறவைப் பூங்காவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர்

ஜூரோங் பறவைப் பூங்காவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர்

1 mins read
133b8f47-bdbe-42bf-9543-e4be57751000
-

ஜூரோங் பறவைப் பூங்காவைப் பற்றிய தமது நினைவுகளைப் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 1988ஆம் ஆண்டில் ஃபூஜி பருந்து மையத்தைத் திரு லீ திறந்து வைத்தார். அப்போது பருந்து ஒன்று தமது கையில் உட்கார்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படத்தை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

மண்டாய் திட்டத்தை ஒட்டி சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காக்களில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளுமாறு பொதுமக்களை சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் கேட்டுக்கொண்டிருந்து.

அதன் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் லீ தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். சிங்கப்பூர் வனவிலங்கு பூங்காக்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவர் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார். வனவிலங்கு பூங்காக்களில் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி www.mymandai.com இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.